• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • ஆமை என நினைத்து முதலையுடன் விளையாடிய சிறுவன்... அடுத்து நடந்தது?

ஆமை என நினைத்து முதலையுடன் விளையாடிய சிறுவன்... அடுத்து நடந்தது?

முதலை

முதலை

அந்த 2 வயது சிறுவன் ஆமை என்று தவறுதலாக நினைத்துக்கொண்டு ஒரு பெரிய முதலையுடன் சில நாட்களாக விளையாடி வந்துள்ளான்.

  • Share this:
    நமது குழந்தை பருவத்தில் பல வித வினோத முயற்சிகளை செய்திருப்போம். 5 படிக்கட்டுகளுக்கு மேல் இருந்து கீழே குதிப்பது, குருவிகளை உண்டிகோலால் குறி வைத்து அடிப்பது, சின்ன சின்ன கோழிகளை வளர்ப்பது போன்ற பல்வேறு செயல்களை செய்திருப்போம். ஆனால் இவற்றில் பல நேரங்களில் நமக்கு பாதிப்பு தர கூடிய விளைவுகள் நடந்திருக்க கூடும். சில நேரங்களில் நாம் செய்வது என்னவென்று அறியாமல் அவற்றை செய்திருப்போம். இருப்பினும் அதனால் உண்டாகும் பாதிப்பு அதிகம் இருக்கலாம். இப்படியொரு சம்பவம் தான் அமெரிக்காவை சேர்ந்த சிறுவனுக்கும் நடந்துள்ளது.

    அமெரிக்காவில் உள்ள ஃபுளோரிடா மாகாணத்தை சேர்ந்த ஜோ பிரென்னர் என்பவருக்கு 2 வயதில் ஒரு மகன் உள்ளார். எல்லோரையும் போலவே தனது குழந்தையை விளையாடுவதற்காக அனுப்பி விட்டு, பிறகு இவர்களின் வீட்டு வேலைகள் மற்றும் அலுவலக பணிகளை செய்து வந்திருக்கிறார்கள். இந்த 2 வயது சுட்டி பையனும் தினமும் விளையாடுவதற்கு வெளியில் சென்று வந்துள்ளான்.

    நாளுக்கு நாள் அதிக நேரம் விளையாடி வந்துள்ளார் இந்த சிறுவன். இதை கவனித்த ஜோ பிரென்னர், தன் மகன் இவ்வளவு நேரம் எங்கு விளையாடி வருகிறான், யாருடன் விளையாடி வருகிறான் என்று தெரிந்து கொள்ள ஆசைப்பட்டுள்ளார். எனவே தனது மகனை ஒருநாள் பின்தொடர்ந்து சென்றுள்ளார். அங்கு தான் அவருக்கு மிக பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.

    அந்த 2 வயது சிறுவன் ஆமை என்று தவறுதலாக நினைத்துக்கொண்டு ஒரு பெரிய முதலையுடன் சில நாட்களாக விளையாடி வந்துள்ளான். இதை பார்த்த அந்த தந்தைக்கு தூக்கி வாரிப் போட்டுவிட்டது. உடனே அவரின் மகனை அங்கிருந்து சட்டென அழைத்து சென்று விட்டார். தன் மகன் முதலையுடன் விளையாடியும் இப்படி உயிருடன் இருப்பதை கண்டு அவர் பீதியுடன் ஆச்சரியப்பட்டார்.

    ஜோ பிரென்னர் வீட்டின் அருகில் உள்ள ஒரு கால்வாயில் இந்த முதலை தவறுதலாக மாட்டி கொண்டுள்ளது. இதை பார்த்த அவரின் மகன் அது ஆமையாக தான் இருக்கும் என்று நினைத்து கொண்டு அதனுடன் விளையாடி வந்திருக்கிறார். மேலும் அந்த முதலை வெளிய வருவதற்காக இந்த 2 வயது சிறுவன் உதவ முயற்சித்த போது தான் அவரின் தந்தை அங்கு சென்று மகனை காப்பாற்றி உள்ளாராம். இல்லையேல் அவர் தனது மகனை இழந்திருப்பார்.

    இந்த திகில் சம்பவத்தை கேள்விப்பட்ட அக்கம்பக்கத்து வீட்டினர் உடனே வனவிலங்கு மீட்பு குழுவிற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அங்கு விரைந்து வந்து அந்த பெரிய முதலையை மீட்பு குழுவினர் மீட்டெடுத்து சென்றுவிட்டனர். இதே போன்ற ஒரு சம்பவம் இங்கிலாந்தை சேர்ந்த பெண் ஒருவருக்கும் நடந்துள்ளது. அவரின் வீட்டுக்கு அருகில் 4 அடி உயரம் கொண்ட ஒரு முதலை உலாவி வருவதாக அவர் தெரிவித்துள்ளார். குழந்தைகள் எப்போது வெளியில் விளையாட சென்றாலும் அவர்களின் செயல்களை பெற்றோர்கள் மிக கவனமாக பார்த்து கொள்வது அவசியம். இதை இந்த 2 வயது சிறுவனுக்கு நடந்த சம்பவத்தின் மூலம் நாம் மீண்டும் நினைவில் வைக்க வேண்டும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    First published: