பஞ்சாப் பெண்ணை விரும்பிய ஆந்திரா பையன் - குடும்பத்தில் நடந்த சுவாரஸ்யம்!

பஞ்சாப் பெண்ணை விரும்பிய ஆந்திரா பையன் - குடும்பத்தில் நடந்த சுவாரஸ்யம்!

கோப்புப் படம்

சிலர் தங்கள் காதலை ஒப்புக்கொள்வதா அல்லது பெற்றோருக்காக காதலை கைவிடுவதா? என்ற குழப்பத்திலேயே இருப்பார்கள்.

  • News18
  • Last Updated :
  • Share this:
காதல் செய்பவர்கள் எப்போதும் ஒருவித பதட்டத்தில் இருப்பதை நாம் பார்த்திருப்போம். காதல் படகில் பயணம் செய்வது எப்போதும் தந்திரமான பயணமாகும். சிலர் தங்கள் காதலை ஒப்புக்கொள்வதா அல்லது பெற்றோருக்காக காதலை கைவிடுவதா? என்ற குழப்பத்திலேயே இருப்பார்கள்.

இந்தியாவில் டேட்டிங் மற்றும் காதல் திருமணங்கள் மிகவும் எளிதான விவகாரமாக இருப்பதில்லை, குறிப்பாக குடும்பத்தை சமாதானப்படுத்துவது என்பது மிகவும் கடினமான காரியமாக இருக்காது.

உங்கள் காதலன்/ காதலி உங்களை விட வேறு சமூகத்திலிருந்து வரும்போது நிலைமை இன்னும் கடினமாகிறது. அர்ஜுன் கபூர் மற்றும் ஆலியா பட் நடித்த 2 ஸ்டேட் படத்தில் இதுகுறித்து காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். சேதன் பகத்தின் பிரபலமான நாவலை அடிப்படையாகக் கொண்ட இந்த படம் இளைஞர்களிடையே வரவேற்பை பெற்றது. இந்த கதையை ஒத்த ஒரு காதல் கதை சமீபத்தில் நடந்துள்ளது குறித்து ட்விட்டரில் தகவல் வெளியானது. இதில் இருமாநிலங்களை காதலர்கள் தங்கள் காதலை வீட்டில் சொல்லியபோது நடந்த சம்பவத்தை ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்த நிலையில், ஏராளமானோர் இதற்கு கமெண்ட் செய்து வருகின்றனர்.

Also read... மருமகளாக வர இருந்த பெண், தொலைந்து போன தன் மகளே என்று திருமணத்தின் போது அறிந்த தாய்

ஆந்திராவைச் சேர்ந்த ஒருவர் தனது பஞ்சாபி காதலியை பற்றி அவரது குடும்பத்தினருக்கு தெரிவித்ததோடு, இந்த சம்பவத்தை ட்விட்டரில் பகிர்ந்து கொண்டார். இதுகுறித்த அவரது பதிவில், விவேக் ராஜு என்ற நபர் தனது காதலியை பற்றிய செய்திகளை தனது பெற்றோரிடம் பகிர்ந்து கொண்டது குறித்து குறிப்பிட்டுள்ளார். அதில் "வீட்டில் தற்போது வேடிக்கையான விஷயங்கள் நடைபெற்று கொண்டிருக்கிறது. அம்மா பரவாயில்லை. அப்பா முற்றிலும் அமைதியாகிவிட்டார். வாழ்நாளில் ஒரு முறை தான் பெற்றோரிடமிருந்து இதுபோன்ற வேடிக்கையான விஷயங்களை எதிர்பார்க்க முடியும் (என் சகோதரரும் இதுபோல செயலில் எடுபடாமல் இருந்தால்) என தெரிவித்தார்.

பின்னர் அவர் தனது காதலியின் குடும்பம் டேட்டிங் மற்றும் அனைத்திற்கும் சம்மதம் தெரிவித்து விட்டதாக கூறினார். இதனிடையே என்பது தந்தை அனைத்து பிரச்சனைகளையும் சமாளித்துவிட்டு எனது காதலியை சந்திக்க முடிவு செய்தார், நாட்டை அச்சுறுத்தும் உலகளாவிய தொற்றுநோயை முற்றிலும் தவிர்த்துவிட்டு கூட இந்த முடிவை எடுத்தார்.

தந்தை பெண்ணை நேருக்கு நேர் சந்திக்க விரும்பியதால் வீடியோ கால் பேசலாம் என்ற ஆலோசனையும் நிராகரிக்கப்பட்டது. விவேக் ராஜு தனது காதலியின் குடும்பத்தினர் டேட்டிங் பற்றி எதுவும் கூறவில்லை, அவர் தனது காதல் குறித்து வெளிப்படையாக பேசியபோது அவர்கள் எவ்வித நாடகமும் இன்றி தங்கள் சம்மதத்தை தெரிவித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். இதற்கு பின்னர் என்ன நடந்தது என்பது குறித்து விவேக் தனது சமூக வலைத்தளங்களில் குறிப்பிடவில்லை. தனது காதல் கதை குறித்த விவரங்களை விவேக் ஷேர் செய்வார் என நெட்டிசன்கள் ஆர்வமாக இருந்தனர், அவர் அடுத்து என்ன பகிர்வார் என்று எதிர்பார்த்து காத்திருப்பதாக பலரும் கமெண்ட் செய்திருந்தனர்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: