Home » News » Trend

பரதநாட்டியமா...? ஹிப் ஹாப் நடனமா..? ’ஹைப்ரிட் பரதம்’ என இன்ஸ்டாகிராமை கலக்கும் பாரீஸ் பெண்கள்..!

பரதநாட்டியம் ஹிப் ஹாப் இரண்டையும் ஒரே சமயத்தில் ஆடுவது என்பது...சற்று ஆச்சரியத்தில் ஆழ்த்தும் விஷயம்தான்.

பரதநாட்டியமா...? ஹிப் ஹாப் நடனமா..? ’ஹைப்ரிட் பரதம்’ என இன்ஸ்டாகிராமை கலக்கும் பாரீஸ் பெண்கள்..!
வைரல்
  • Share this:
எல்லாமே ஹைப்ரிட் என்றாகிவிட்டாலும்,  கலாச்சார விஷயங்களைக் கூட ஹைப்ரிட் ஆக்கி ரசிக்கிறது இன்றைய தலைமுறை.  பாரீஸை சேர்ந்த இரு பெண்கள் பரதநாட்டியத்தில் ஹிப் ஹாப்பை புகுத்தி அதை ஹைப்ரிட் பரத என பெயர் வைத்து இன்ஸ்டாகிராமில்  கலக்கி வருகின்றனர்.

ஃபியூஷன் ஸ்டைல் நடனம் என்றாலே இரு நடன வகையை ஒன்றிணைத்து புதுமையாக ஒரு ஸ்டைலை உருவாக்குவதுதான். ஆனால் இரண்டையும் ஒரே சமயத்தில் ஆடுவது என்பது...சற்று ஆச்சரியத்தில் ஆழ்த்தும் விஷயம்தான். அதைத்தான் இந்த இரு பெண்களும் அசால்டாக செய்து வருகின்றனர்.






உஷா ஜெய் என்கிற பெயரில் இந்த இரு பெண்களும் இன்ஸ்டாவில் போடும் ஒவ்வொரு வீடியோக்களும் வைரலாகின்றன. மற்றொரு பெண் ஓர்லேன் டிடி. உஷா ஜெய் இதுவரை மூன்று நடனப் பதிவுகளை போட்டுள்ளார்.

முதல் பதிவில் “ எனக்கு ஹிப் ஹாப்தான் முதல் காதல். 2-3 வருடங்களுக்கு முன்புதான் பரதம் கற்றுக்கொண்டேன். இரண்டையும் இணைத்து ஆடினால் எப்படி இருக்கும் என முயற்சித்துப் பார்த்ததின் விளைவுதான் இந்த வீடியோ” என்று குறிப்பிட்டுள்ளார். இதில் என்ன ஒரு சிறப்பு எனில் உஷா ஜெய் தமிழ்ப்பெண்.




உஷா ஜெய் பிரெஞ்சு வாழ்க்கை முறையைக் கொண்டிருந்தாலும் தமிழையும் , தமிழ் கலாச்சாரத்தையும் விரும்புகிறார் என்பது இந்த நடனத்தின் மூலம் தெரிகிறது. அதுமட்டுமன்றி பல தமிழ் பாடல்களுக்கும் ஹிப் ஹாப் ஸ்டைலில் நடனம் ஆடி பதிவு செய்துள்ளார்.



 




View this post on Instagram




 

#HybridBharatham I EPISODE 3. Hey @jackharlow, whats poppin ? 🍯 ➖⁣⁣⁣⁣ I call this #HybridBharatham and this is my way of mixing 2 styles that I love. Hip-Hop will always be my first love, but I have a big affection for Bharatham. I’m not an expert of Bharatham yet, but I will be. 🤟🏾⁣⁣⁣ ➖⁣⁣⁣⁣ 𝐃𝐚𝐧𝐜𝐞𝐫𝐬 : @orlane_dede 𝐱 @usha_jey⁣⁣ 𝐂𝐡𝐨𝐫𝐞𝐨𝐠𝐫𝐚𝐩𝐡𝐲 : @usha_jey ⁣⁣⁣⁣ 𝐓𝐫𝐚𝐜𝐤 𝐜𝐮𝐭 : @kidathegreat 𝐱 @baileysok 𝐒𝐩𝐞𝐜𝐢𝐚𝐥 𝐭𝐡𝐚𝐧𝐤𝐬 : @saja.sathiya 𝐱 @ithaj_muah ➖⁣⁣⁣⁣ #whatspoppin #jackharlow #hiphop #dance #ilovethisdance #baratham #bharatham #bharathanatyam #barathanatyam #tamil #tamildance #ghettostyle


A post shared by Usha Jey (@usha_jey) on











 




View this post on Instagram




 

Totally #Rajinified 💥 #PettaParaak @anirudhofficial ➖ 📹 : @freetoroll 👕 : @dukusa_


A post shared by Usha Jey (@usha_jey) on








 




View this post on Instagram




 

I have bought a new cap, please watch #lmxbattlepreselection


A post shared by Usha Jey (@usha_jey) on






அங்குள்ள பாரீஸ் இளைஞர்களுக்கு ஸ்டுடியோவில் தமிழ் பாடல்களுக்கு நடனம் கற்றுத் தரும் வீடியோக்களையும் காண முடிகிறது.
First published: August 9, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading