முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / கணவனின் நீண்ட ஆயுளுக்கு சிறையில் விரதம் இருந்த பெண்கள்.. அவர்கள் சிறையில் இருப்பதே கணவனை கொன்ற வழக்கு என்பது தான் ஹைலைட்

கணவனின் நீண்ட ஆயுளுக்கு சிறையில் விரதம் இருந்த பெண்கள்.. அவர்கள் சிறையில் இருப்பதே கணவனை கொன்ற வழக்கு என்பது தான் ஹைலைட்

கர்வா சவுத் விரதம்

கர்வா சவுத் விரதம்

Karwa Chauth in Prison | உத்தர பிரதேச மாநிலத்தில் தங்கள் கணவர்களை கொலை செய்த வழக்கில் தண்டனை பெற்று சிறைவாசம் அனுபவித்துக் கொண்டிருக்கும் இரு பெண்கள் “கர்வா சவுத்” என்ற கணவனை ஆரோக்கியத்துடன் நீண்ட நாள் வாழ செய்வதற்காக பெண்களால் கடைபிடிக்கப்படும் விரதத்தை சிறையிலேயே கடைப்பிடித்து பூஜை செய்த வினோத நிகழ்வு அரங்கேறியுள்ளது.

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :
  • Uttar Pradesh, India

உத்தர பிரதேச மாநிலத்தில் தங்கள் கணவர்களை கொலை செய்த வழக்கில் தண்டனை பெற்று சிறைவாசம் அனுபவித்துக் கொண்டிருக்கும் இரு பெண்கள் “கர்வா சவுத்” என்ற கணவனை ஆரோக்கியத்துடன் நீண்ட நாள் வாழ செய்வதற்காக பெண்களால் கடைபிடிக்கப்படும் விரதத்தை சிறையிலேயே கடைப்பிடித்து பூஜை செய்த வினோத நிகழ்வு அரங்கேறியுள்ளது.

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் இரண்டு பெண் சிறைவாசிகள் கடந்த வியாழக்கிழமை கர்வா சவுத் எனப்படும் விரதத்தை சிறையிலேயே கடைப்பிடித்துள்ளனர். இந்த கர்வா சவுத் என்ற விரதம், திருமணமான பெண்களால் தங்கள் கணவரின் ஆரோக்கியமான வாழ்க்கைக்கும், நீடித்த ஆயுளுக்காகவும் வேண்டி கடைப்பிடிக்கபடுவதாகும். இதில் ஆச்சரியபடத்தக்க விஷயம் என்னவென்றால் இந்த இரண்டு பெண்களும் தங்களுடைய கணவர்களை கொலை செய்த வழக்கில் கைதாகி சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர். அதாவது கணவரை கொன்று விட்டு, அவரின் நீண்ட ஆயுளுக்காக பூஜை செய்து விரதம் இருக்கிறார்கள்.

உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் சிறைசாலை துறை அமைச்சர் தரம்வீர் பிரஜபதியின் உத்தரவின் பேரில் உத்தரபிரதேசத்தின் சிறைச்சாலைகளில் உள்ள திருமணமான பெண்கள் அனைவரும் கர்வா சவுத் எனும் விரதத்தை கடைபிடிக்கவும் அனைத்து பூஜை முறைகளையும் சிறைக்குள்ளேயே செய்வதற்கும் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி லக்னோ சிறைச்சாலையில் உள்ள 50 பெண் சிறைவாசிகளில் 10 பேர் கர்வா சவுத் விரதத்தை கடந்த வியாழக்கிழமை கடைபிடித்தனர். இந்த விரதத்தின் போது சிறைக் கைதிகள் தங்களுடைய குடும்பத்தினரை சந்திக்கவும் குடும்பத்தினரிடமிருந்து பூஜைக்கு தேவையான பொருட்கள் அனைத்தையும் பெறுவதற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Also Read : எனக்கு 60 அவருக்கு 30.. பழங்குடியின இளைஞருடன் அமெரிக்க பெண்ணுக்கு மலர்ந்த காதல்..!

இதைப் பற்றி பேசிய மாவட்ட சிறைச்சாலை மூத்த கண்காணிப்பாளர் ஆகாஷ் திவாரி ”இங்கு சிறை தண்டனையில் இருக்கும் திருமணமான பெண் சிறை கைதிகளுக்கு கர்வா சவுத் விரதத்தை கடைபிடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. விரதம் மற்றும் பூஜையின் போது இவர்கள் முழுமையாக கண்காணிக்கப்படுகிறார்கள். மேலும் அவர்கள் விரதத்தை முழுமையாக முடித்த பிறகு தான் மீண்டும் சிறைக்குள் அடைக்கப்படுகிறார்கள். விரதம் இருக்கும் பெண்களில் பாதிக்கும் மேற்பட்டவர்களின் கணவர்களும் சிறையில் அவர்களின் மனைவியை பார்ப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். விரதம் கடைபிடிக்கும் இந்த நாளில் மட்டும் அவர்களுக்கு விசேஷ அனுமதி உண்டு" என்று தெரிவித்தார்.

விரதம் இருப்பவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்கவும், பூஜையை முழுவதுமாக செய்து முடிப்பதற்கு அவர்கள் என்னென்ன கேட்கிறார்களோ அவை அனைத்தையும் வழங்கவும் சிறைத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

திருமணமான பெண் சிறைவாசிகள் சிறைக்கு வெளியே வட்டமாக கூடி உட்கார்ந்து நிலவு வரும் வரை காத்திருந்து, நிலவை தரிசித்தவுடன் பூஜையை துவங்குகின்றனர். அவர்கள் பூஜை முடியும் வரை முழுவதுமாக கண்காணிக்கப்பட்டு பூஜைகள் முடிந்த பிறகு சிறைக்குள் மீண்டும் அடைக்கப்படுகின்றனர்.

Also Read : எனக்கொரு ப்ளேட் கொடுங்க..பானிப்பூரி சாப்பிடும் யானை..வைரலாகும் வீடியோ!

இதில் கோரக்பூர் எனும் இடத்தில் உள்ள மாவட்ட சிறைச்சாலையில் இருக்கும் பெண் சிறைவாசிகள் 12 பேர் இந்த கர்வா சவுத் விரதத்தை கடந்த வியாழக்கிழமை கடைப்பிடித்தனர். அப்போது மிக வித்தியாசமான ஒரு நிகழ்வும் நடந்தேறியது. அதில் தன்னுடைய கணவர்களை கொலை செய்த இரண்டு பெண்களும் இந்த கர்வா சவுத் விரதத்தை கடைபிடித்தனர். ளுக்காக கர்வா சவுத் விரதத்தை கடைப்பிடித்தார்.

top videos

    இப்படி யாருக்காக விரதத்தை கடைப்பிடிக்கிறோமோ அவர்களையே கொலை செய்துவிட்டு மீண்டும் அவர்களின் நீண்ட ஆயுளுக்காகவே விரதம் இருப்பது அனைவருக்கும் மிக வினோதமாக இருந்தது.

    First published:

    Tags: Prisoners, Trending, Uttar pradesh