முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / நிலவை துல்லியமாக போட்டோ எடுத்து 10ம் வகுப்பு மாணவர் சாதனை - குவியும் பாராட்டு!

நிலவை துல்லியமாக போட்டோ எடுத்து 10ம் வகுப்பு மாணவர் சாதனை - குவியும் பாராட்டு!

நிலவை துல்லியமாக போட்டோ எடுத்து 10ம் வகுப்பு மாணவர்

நிலவை துல்லியமாக போட்டோ எடுத்து 10ம் வகுப்பு மாணவர்

கடந்த மே 3ம் தேதி இரவு 1 மணிக்கு நிலவை படமாக்கத் தொடங்கியிருக்கிறார்.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

நிலவை துல்லியமாக படம் பிடித்த பூனேவைச் சேர்ந்த 10 ஆம் வகுப்பு மாணவரின் செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

பூனேவை சேர்ந்த 16ம் வயதே ஆன பிரதமேஷ் ஜஜூ, பூனேவில் உள்ள வித்யா பவன் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்திருக்கிறார். இவருடைய அப்பா கம்ப்யூட்டர் வியாபாரம் மற்றும் பழுது நீக்கும் தொழில் செய்து வந்திருக்கிறார். பிரதமேஷிற்கு ஃபோட்டோகிராபியில் ஆர்வம் அதிகம்.

இந்நிலையில் இவர் நிலவை துல்லியமாக படமாக்க திட்டமிட்டிருக்கிறார். இதற்காக சில கட்டுரைகள் மற்றும் வீடியோவை பார்த்து அது பற்றி தெரிந்துகொண்டுள்ளார். கடந்த மே 3ம் தேதி இரவு 1 மணிக்கு நிலவை படமாக்கத் தொடங்கியிருக்கிறார். கிட்டத்தட்ட 4 மணி நேரம் முயற்சியில் போட்டோ மற்றும் வீடியோ எடுத்துள்ளார். சுமார் 50,000 படங்கள் வரை அவர் எடுத்திருக்கிறார். அதனை பிராசஸ் செய்வதற்கு சுமார் 40 மணி நேரத்திற்கு மேல் ஆகியிருக்கிறது. புகைப்படங்களை இணைத்து துல்லியமான நிலவு இமேஜை கொண்டு வரவே இந்த முயற்சி.

இந்த புகைப்படங்கள் மட்டும் 100 GB அளவிற்கு இடத்தை எடுத்துக்கொண்டிருக்கிறது. அதனை பிராசஸ் செய்த போது 168 GB ஆகியிருக்கிறது. இறுதியாக முழுமையான நிலவின் தோற்றம் கொண்ட புகைப்படம் 600 MB என்ற அளவிற்கு மாறியிருக்கிறது.

துல்லியமான நிலவின் படத்தை இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அவர் பகிர்ந்த நிலையில், தற்போது அந்த புகைப்படம் எண்ணற்ற லைக்குகளை பெற்று வருகிறது. அந்த பதிவில், இந்த நிலவின் படத்தில் இரும்பு, டைட்டானியம் மற்றும் ஆக்ஸிஜன் ஆகியவற்றை உள்ளடக்கிய இல்மனைட் நிறைந்த பகுதிகளை நீல நிற டோன்கள் வெளிப்படுத்துகின்றன. ஆரஞ்சு மற்றும் ஊதா நிறங்கள் டைட்டானியம் மற்றும் இரும்பு ஆகியவற்றை பகுதிகளைக் காட்டுகின்றன. வெள்ளை / சாம்பல் நிற டோம்கள் சூரிய ஒளியை அதிக அளவில் வெளிப்படுத்தும் பகுதிகளைக் குறிக்கின்றன என்று குறிப்பிட்டுள்ளார்.

பிரதமேஷ் சமூக வலைதளங்களில் தீவிரமாக செயல்பட்டு வந்திருக்கிறார். அவருக்கு இன்ஸ்டாகிராமில் அவருக்கு 26,500 ஃபாலோயர்ஸ்களை பெற்றுள்ளார். பிரதமேஷிற்கு வானியற்பியல் ஆய்வாளராக விருப்பமாம். அதற்காக வானியலை படிக்க திட்டமிட்டுள்ளாராம். தற்போது புகைப்படம் எடுப்பது அவரது பொழுதுபோக்கு மட்டுமே என்று கூறுகிறார். இது ஒரு புறமிக்க பிரதமேஷ் சிறந்த தடகளவீரரும் ஆவார். இவர் தேசிய அளவிலான போட்டிகளில் கலந்துகொண்டிருக்கிறார்.

Also read... விசித்திரமான கனவுகள் நமது மூளையை ஆரோக்கியமாக்கும் - சமீபத்திய ஆய்வில் தகவல்!

பள்ளியில் பயிலும் காலத்திலேயே தானாக முன் வந்து அறிவியல் சார்ந்த முயற்சிகளில் ஈடுபட்டுவரும் பிரதமேஷ் போன்ற மாணவர்களின் செயல் உலக அளவில் இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் வகையில் உள்ளது. பிரதமேஷிற்கு நம் அரசு உரிய பாராட்டும் கௌரவமும் அளிக்க முன் வர வேண்டும். அப்படி செய்தால் பிரதமேஷ் போன்று பிற மாணவர்களுக்கும் தாங்களும் இதுபோன்று ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றும் என்பது நிச்சயம்.

உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

First published:

Tags: Moon, Photography