ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

ஸ்மார்ட்போன் வாங்க ரத்தத்தை விற்க முயன்ற சிறுமி.. ஷாக்கான மருத்துவ அதிகாரிகள்!

ஸ்மார்ட்போன் வாங்க ரத்தத்தை விற்க முயன்ற சிறுமி.. ஷாக்கான மருத்துவ அதிகாரிகள்!

அதிர்ச்சி சம்பவம்

அதிர்ச்சி சம்பவம்

ஒன்பதாயிரம் ரூபாய்காக தனது ரத்தத்தை விற்க சிறுமி முயன்றுள்ள சம்பவம் பலரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நம்மில் பெரும்பாலானோர் விலையுயர்ந்த ஸ்மார்ட்ஃபோன்களை வைத்திருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். இதற்காக தங்கள் செலவில் மிச்சம் பிடித்தோ அல்லது EMI ஆப்ஷனை பயன்படுத்தியோ இந்த கனவை நிறைவேற்றி கொள்ள பார்ப்போம்.

இதற்கிடையே இன்றைய தலைமுறை குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடையே ஸ்மார்ட்ஃபோன், சோஷியல் மீடியா மற்றும் ஆன்லைன் கேமிங் மோகம் மிகவும் அதிகரித்து காணப்படுகிறது. ஸ்மார்ட்ஃபோன்களை வாங்க பலரும் பல உபயோகமான வழிகளை பார்க்கும் நிலையில், ஆப்பிள் நிறுவனத்தின் விலையுயர்ந்த ஐபோனுக்காக தங்கள் சிறுநீரகங்களை விற்ற மற்றும் விற்க முயன்ற சம்பவங்களை பற்றியும் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். இவை வெளிநாட்டில் நடந்த சம்பவங்கள் என்பதால் கடந்து சென்று விட்டோம்.

ஆனால் இந்தியாவில் தற்போது ஸ்மார்ட்ஃபோன் வாங்கும் முயற்சியில் இது போன்ற சம்பவம் பதிவாகி இருப்பது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. ஆன்லைனில் ஆர்டர் செய்த ஸ்மார்ட்ஃபோன் விரைவில் டெலிவரியாக போகிறது என்ற நிலையில், காசை ஏற்பாடு செய்ய முடியாமல் போக ரத்தத்தை விற்க துணிந்த ஒருவரின் கதையை தான் தற்போது பார்க்க போகிறோம். இந்த செயலில் ஈடுபட துணிந்தது ஒரு சிறுமி என்றால் உங்களால் நம்ப முடிகிறதா.! நம்மை அதிர வைக்கும் இந்த சம்பவம் நடந்தது மேற்கு வங்கத்தில் உள்ள பலூர்காட் மாவட்ட மருத்துவமனையில்,

Read More : ஆட்டோ கூரையின் மீது தோட்டம் வளர்க்கும் ஆட்டோ ஓட்டுநர்: குவியும் பாராட்டுக்கள்!

ஸ்மார்ட் ஃபோனுக்காக ரத்தத்தை விற்க முயன்றவர் 16 வயது சிறுமியாவார். இந்த சிறுமி தன் தோழியின் மொபைலில் இருந்து ஆன்லைனில் ஸ்மார்ட்ஃபோன் ஒன்றை ஆர்டர் செய்தாள். அந்த மொபைல் 2 நாட்களில் வந்துவிடும் என்று ஒரு மெசேஜ் வந்தது. ஆனால் மொபைல் ஆர்டர் செய்த சிறுமி பணத்தை ஏற்பாடு செய்ய முடியாமல் தவித்துள்ளார். பல இடங்களில் முயன்றும் எதிர்பார்த்த பணம் கிடைக்காததால் மனமுடைந்த சிறுமிக்கு மொபைலை மிஸ் செய்ய மனமில்லை. எனவே இறுதியாக தன் ரத்தத்தை விற்று மொபைலுக்கான காசை ஏற்பாடு செய்ய முடிவு செய்துள்ளாள்.

இதனை தொடர்ந்து டியூஷனுக்குச் செல்வதாகக் கூறி வீட்டை விட்டு வெளியேறிய மாணவி பஸ் ஏறி நேராக பலூர்காட் மாவட்ட மருத்துவமனைக்கு வந்துள்ளார். அங்கு இருக்கும் ரத்த வங்கியை அணுகி தன் சகோதரனின் சிகிச்சைக்கு பணம் வேண்டும் என்பதால் ரத்தத்தை விற்க விரும்புவதாக கூறி இருக்கிறார். எனினும் இவரது பேச்சில் நம்பிக்கை ஏற்படாததால் அங்கிருப்பவர்கள் சிறிது நேரம் பேச்சு கொடுத்து நைஸாக உண்மையை கறக்க முயன்றுள்ளனர். ஆனால் பதற்றத்தில் அந்த சிறுமி மொபைல் வாங்க என உளறியுள்ளார். இதனை தொடர்ந்து ரத்த வங்கி அதிகாரிகள் உடனடியாக சைல்டு லைன் இந்தியாவுக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சைல்டுலைன் இந்தியா அமைப்பின் உறுப்பினர் ஒருவர் சிறுமியிடம் தொடர்ந்து பேச்சு கொடுத்து ஆலோசனை வழங்கி உள்ளார். இறுதியில் அவரிடம் நடந்த அனைத்தையும் கூறி, வர உள்ள மொபைலை தவறவிட கூடாது என்ற எண்ணத்தில் ரத்தத்தை விற்று காசாக்க முடிவெடுத்ததாக கூறி இருக்கிறார். பின்னர் அந்த சிறுமிக்கு தகுந்த அறிவுரை வழங்கப்பட்டு மாவட்ட குழந்தைகள் நலக் குழுவின் உதவியுடன் பெற்றோரிடம் சிறுமி ஒப்படைக்கப்பட்டு உள்ளார். சரி, சிறுமி ஆர்டர் செய்த ஸ்மார்ட்ஃபோனின் விலை எவ்வளவு தெரியுமா.? ரூ.9,000.

ஆம் ஒன்பதாயிரம் ரூபாய்காக தனது ரத்தத்தை விற்க சிறுமி முயன்றுள்ள சம்பவம் பலரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

Published by:Lilly Mary Kamala
First published:

Tags: Smart Phone, Trending News, Viral