முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / டெக்சாஸில் 1,500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒரே நேரத்தில் முழு பகவத்கீதை வாசித்து கின்னஸ் சாதனை!

டெக்சாஸில் 1,500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒரே நேரத்தில் முழு பகவத்கீதை வாசித்து கின்னஸ் சாதனை!

பகவத் கீதை

பகவத் கீதை

"கீதா மஹாயஜ்னா" என்ற திட்டத்திற்கு கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சிக்கு "ஒரே நேரத்தில் மிகப்பெரிய இந்து உரை வாசிப்புக்கான" சாதனை சான்றுதல் வழங்கப்பட்டது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • international, IndiaTexasTexas

அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தின் தலைநகரான டல்லாஸில், கீதா சஹஸ்ரகலா (Gita Sahasragala) என்ற நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் பகவத் கீதை ஸ்லோகங்களை சரளமாக வாசிக்கும் சுமார் 700 பேருடன் சேர்ந்து 1,500-க்கும் மேற்பட்ட மாணவர்களும் பங்கேற்று முழு பகவத்கீதையை வாசித்து சாதனை படைத்து உள்ளனர்.

ஆலன் நிகழ்வு மையத்தில் (Allen Event Center) ஸ்ரீ கணபதி சச்சிதானந்த சுவாமிகளின் முன்னிலையில் ஸ்ரீ அவதூத தத்த பீடத்தால் (Shri Avadhoota Datta Peetham ) இந்த பிரமாண்டமான நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த நிகழ்வு கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்ததால் இது ஒரு வரலாற்றுத் தருணமாகக் கருதப்படுகிறது. ஏறக்குறைய சுமார் ஒரு வருடமாக இந்த சாதனைக்காகப் பயிற்சி மேற்கொள்ளப்பட்டது.

ஸ்ரீ கணபதி சச்சிதானந்த சுவாமி  ஃப்ரிஸ்கோவில் உள்ள காரிய சித்தி ஹனுமான் கோவிலின் (KSHT) நிறுவனர் ஆவார். மேலும் அவர் "கீதா மஹாயஜ்னா" என்ற திட்டத்தை நிறுவினார். அதாவது கீதை ஒரு சிறந்த பிரசாதம், அதன் சரியான சமஸ்கிருத பாராயணம் மற்றும் மனப்பாடம் செய்து ஒப்பிப்பதற்கான நினைவாற்றலையும் ஊக்குவிப்பதும் , கற்பிப்பதும் இதன் குறிக்கோள்.

இதனிடையே கீதா சஹஸ்ரகலா நிகழ்ச்சியில் ஒரே நேரத்தில் அதிகம் பேர் பகவத்கீதையை வாசித்தபிறகு கின்னஸ் புத்தகத்தில்  பிரதிநிதி ஒருவர் சுவாமிஜிக்கு "ஒரே நேரத்தில் மிகப்பெரிய இந்து உரை வாசிப்புக்கான" உலக சாதனையைப் படைத்ததற்கான கின்னஸ் ரெக்கார்ட் சான்றிதழை வழங்கினார். மேலும் இந்த நிகழ்வைத் தொடர்ந்து ஃபிரிஸ்கோ நகரத்தின் மேயர் ஆகஸ்ட் 13, 2022 அன்று “கீதா சஹஸ்ரகலா தினம்” என்று அறிவித்துள்ளார்.

Also Read : ஒரு கால் இல்லை.. ஊன்றுகாலோடு சொந்த காலில் உழைக்கும் நபர் - வைரலாகும் நெகிழ்ச்சி பதிவு.!

முன்னதாக இந்த ஆண்டின் தொடக்கத்தில் 9 வயது சிறுவன் தனது 7 வயதில் பகவத்கீதையின் ஸ்லோகங்களை 64 நிமிடங்களில் படித்து கின்னஸ் உலக சாதனை படைத்தார். அகமதாபாத்தில் உள்ள தால்தேஜ் பகுதியைச் சேர்ந்த அந்த சிறுவனான த்விஜ் காந்தி, கோவிட் -19 தொற்று நேரத்தின் போது புனித நூலைப் படிக்கத் தொடங்கியதாகக் குறிப்பிட்டான்.

பகவத்கீதையின் மீது தனக்கு இருந்த ஆர்வத்தை குடும்பத்தினரிடம் வெளிப்படுத்திய போது அதை முழுவதுமாக படித்து கற்கும் முயற்சிக்குத் தனது குடும்பத்தினர் முழு ஆதரவு அளித்ததாக த்விஜ் காந்தி குறிப்பிட்டுள்ளனர்.

First published:

Tags: Guinness, Literature