ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

அடி தூள்..! 2023ஆம் ஆண்டில் இவ்வளவு லீவா? வார கடைசியில் வரும் விடுமுறை நாட்கள்..!

அடி தூள்..! 2023ஆம் ஆண்டில் இவ்வளவு லீவா? வார கடைசியில் வரும் விடுமுறை நாட்கள்..!

லீவு எப்போனு தெரிஞ்சிக்கோங்க..!

லீவு எப்போனு தெரிஞ்சிக்கோங்க..!

அடுத்து வரக் கூடிய ஆண்டில், எந்தெந்த மாதங்களில் எத்தனை நாட்கள் விடுமுறை கிடைக்கிறது என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நம் வாழ்க்கையை வாழுவதற்காக பணம் சம்பாதிப்பது முக்கியமான விஷயம் தான். ஆனால், இயந்திரம் போல வருடம் முழுவதும் ஓடிக் கொண்டிருக்க முடியாது. சம்பாதித்த பணத்தில் கொஞ்சம் பணத்தை ஒதுக்கி, கிடைக்கின்ற விடுமுறை நாட்களில் சுற்றுலா சென்று வந்தால் மட்டுமே நம் மனம் புத்துணர்ச்சி அடையும். சுற்றுலா செல்ல வேண்டும் என்றால் திட்டமிடல் இருக்காமல் போகுமா?

அப்படியானால் அடுத்து வரக் கூடிய ஆண்டில், எந்தெந்த மாதங்களில் எத்தனை நாட்கள் விடுமுறை கிடைக்கிறது என்பதை தெரிந்து கொண்டால் மட்டுமே நீங்கள் அதற்கு ஏற்றாற்போல திட்டமிட்டுக் கொள்ள முடியும்.

ஜனவரி மாதம்

இந்த மாதத்தில் மூன்று வாரங்களில் நீண்ட விடுமுறை கிடைக்கிறது. அதாவது, டிசம்பர் 31ஆம் தேதி சனிக்கிழமை, ஜனவரி 1ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என வருகிறது. ஆகவே, டிசம்பர் 30ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்றே பயணம் புறப்பட திட்டமிட்டுக் கொண்டால் சிறப்பாக இருக்கும். ஜனவரி 14ஆம் தேதி சங்கராந்தி பண்டிகையும், ஜனவரி 15ஆம் தேதி பொங்கல் பண்டிகையும் வருகிறது. இந்நிலையில் ஜனவரி 13 மற்றும் 16 ஆகிய தேதிகளில் கூடுதலான விடுப்பு எடுத்துக் கொண்டால் மொத்தமாக 4 நாட்கள் கிடைக்கும்.ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தினம், 28ஆம் தேதி சனிக்கிழமை, 29ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது. இடைப்பட்ட 27ஆம் தேதி விடுப்பு எடுத்துக் கொண்டால் சிறப்பாக அமையும்.

பிப்ரவரி மாதம்

பிப்ரவரி 18ஆம் தேதி மகாசிவராத்திரி பண்டிகையும், பிப்ரவரி 19ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையும் ஆகும். 17ஆம் தேதி விடுப்பு எடுத்துக் கொண்டால் தொடர்ச்சியாக 3 நாட்கள் கிடைக்கும்.

மார்ச் மாதம்

மார்ச் 8ஆம் தேதி புதன்கிழமை அன்று ஹோலி பண்டிகை வருகிறது. இதற்கடுத்த 9, 10 ஆகிய தேதிகளில் தனிப்பட்ட விடுப்பு எடுத்துக் கொண்டால், 11, 12 தேதிகளில் வரும் சனி, ஞாயிறு சேர்த்து 5 நாட்கள் சுற்றுலா செல்ல திட்டமிட்டுக் கொள்ளலாம்.

ஏப்ரல் மற்றும் மே

ஏப்ரல் 4ஆம் தேதி மஹாவீர் ஜெயந்தி, ஏப்ரல் 7ஆம் தேதி புனித வெள்ளி, ஏப்ரல் 8ஆம் தேதி சனிக்கிழமை, ஏப்ரல் 9ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என வருகிறது. இடைப்பட்ட 5, 6 ஆகிய தேதிகளில் விடுப்பு எடுத்துக் கொண்டால் மொத்தமாக 6 நாட்கள் கிடைக்கும்.

மே 5ஆம் தேதி புத்த பூர்ணிமா, மே 6, 7 தேதிகளில் சனி, ஞாயிறு வருவதால் எந்தக் குறுக்கீடும் இல்லாமல் 3 நாட்கள் விடுமுறை வருகிறது.

ஜூன் மற்றும் ஜூலை

ஜூன் 17 - சனி, ஜூன் 18 - ஞாயிறு மற்றும் ஜூன் 20 செவ்வாய்க்கிழமை ரத யாத்திரைக்கான விடுமுறை நாள் ஆகும். இடைப்பட்ட 19ஆம் தேதி விடுப்பு எடுத்துக் கொண்டால் 4 நாட்கள் கிடைக்கும். ஜூன் 29ஆம் தேதி வியாழன் அன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஜூலை 1 மற்றும் 2 சனி, ஞாயிறு ஆகும். இடைப்பட்ட ஜூன் 30 விடுப்பு எடுத்தால் 4 நாட்கள் கிடைக்கும்.

ஆகஸ்ட்

ஆகஸ்ட் 12 - சனிக்கிழமை, ஆகஸ்ட் 13 - ஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்ட் 15 - சுதந்திர தினம், ஆகஸ்ட் 16 - பார்சி புத்தாண்டு (குறிப்பிட்ட மதத்தினருக்கு மட்டும்) ஆகியவை வருகிறது. இடைப்பட்ட 14ஆம் தேதி மட்டும் விடுப்பு எடுத்துக் கொண்டால் தொடர்ச்சியான நாட்கள் கிடைக்கும்.

ஆகஸ்ட் 26ஆம் தேதி சனிக்கிழமை, 27ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, 29ஆம் தேதி ஓணம் பண்டிகை மற்றும் 30ஆம் தேதி ரக்‌ஷா பந்தன் விழா ஆகும். இடைப்பட்ட 28ஆம் தேதி விடுப்பு எடுத்துக் கொண்டால் 5 நாள் சுற்றுலாவுக்கு திட்டமிடலாம்.

செப்டம்பர்

செப்டம்பர் 7ஆம் தேதி ஜன்மாஷ்டமி, செப்டம்பர் 9 - சனிக்கிழமை, செப்டம்பர் 10 - ஞாயிற்றுக்கிழமை வருகிறது. இடைப்பட்ட செப்டம்பர் 8ஆம் தேதி விடுப்பு எடுத்துக் கொள்ளலாம். செப்டம்பர் 16ஆம் தேதி சனிக்கிழமை, செப்டம்பர் 17ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 19ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி ஆகும். இடைப்பட்ட செப்டம்பர் 18 திங்கள் அன்று விடுப்பு எடுத்துக் கொண்டால் 4 நாள் சுற்றுலாவுக்கு திட்டமிடலாம்.

அக்டோபர்

செப்டம்பர் 30 சனிக்கிழமை, அக்டோபர் 1 - ஞாயிற்றுக்கிழமை, அக்டோபர் 2 - காந்தி ஜெயந்தி ஆகும். ஆக தொடர்ச்சியாக 3 நாள் விடுமுறை கிடைக்கிறது. அக்டோபர் 21ஆம் தேதி சனிக்கிழமை, அக்.22 - ஞாயிற்றுக்கிழமை, அக்.24 - தசரா பண்டிகை ஆகும். இடைப்பட்ட 23ஆம் தேதி விடுப்பு எடுத்துக் கொண்டால் 4 நாட்கள் கிடைக்கும்.

நவம்பர்

நவம்பர் 11ஆம் தேதி சனிக்கிழமை, 12ஆம் தேதி தீபாவளி பண்டிகை, 13ஆம் தேதி கோவர்த்தன் பூஜை தினத்தை முன்னிட்டு விடுமுறை ஆகும். நவம்பர் 25, 26 தினங்களில் சனி, ஞாயிறு மற்றும் 27ஆம் தேதி குருநானக் ஜெயந்தி ஆகும்.

டிசம்பர்

டிசம்பர் 23, 24 தேதிகளில் சனி, ஞாயிறு மற்றும் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை என்பதால் தொடர்ச்சியாக 3 நாட்கள் விடுமுறை கிடைக்கும். ஆக, அனைத்து விடுமுறை நாட்களையும் பட்டியல் போட்டு, உங்கள் வசதிக்கு ஏற்ப சுற்றுலாவுக்கு திட்டமிட்டுக் கொள்ளலாம்.

First published:

Tags: New Year 2023, Trending, Viral