ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

ஸ்கூல் வேனில் 15 அடி நீள மலைப் பாம்பு! வனத்துறையை அலறவைத்த பகீர் சம்பவம்!

ஸ்கூல் வேனில் 15 அடி நீள மலைப் பாம்பு! வனத்துறையை அலறவைத்த பகீர் சம்பவம்!

15 அடி நீள மலைப் பாம்பு

15 அடி நீள மலைப் பாம்பு

பள்ளி பேருந்தில் இருந்த 15 அடி நீளமுள்ள ராட்சத மலைப் பாம்பு மீட்கப்பட்டுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Uttar Pradesh, India

  குழந்தைகள் செல்லும் பள்ளி பேருந்தில் 15 அடி நீளமுள்ள ராட்சத மலைப் பாம்பு இருந்துள்ளது. அதனைக் கட்டுக்குள் கொண்டுவர முடியாத நிலையில் போராடி மீட்ட காட்சிகள் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

  உத்தர பிரதேசம் மாநிலம் ரேய்பரேலி என்ற பகுதியில் பள்ளி பேருந்தில் 15 அடி நீளமுள்ள ராட்சத மலைப் பாம்பு புகுந்துள்ளது. பாம்பைப் பேருந்திலிருந்து மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர் ஈட்டுப்பட்டிருந்த நிலையில் மலைப் பாம்பு சினத்துடன் சீறியுள்ளது.

  பெரும் போராட்டத்திற்குப் பின்பு மலைப் பாம்பைப் பத்திரமாக மீட்புக் குழு பேருந்தில் இருந்து மீட்டு எடுத்துள்ளனர். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. அந்த வீடியோவில் பாம்பில் நீளமும் அதனின் சினமும் தெரிகிறது.

  பேருந்தின் இன்ஜின் கீழ் உள்ள ஓட்டையில் சிக்கிக் கொண்ட மலைப் பாம்பை வெளியில் எடுக்க மீட்புக் குழுவினர் மிகவும் சிரமம் அடைந்துள்ளனர். இறுதியில் 15 அடி நீள மலைப் பாம்பைப் பேருந்தில் இருந்து வெளியில் எடுத்து மீட்டுள்ளனர்.

  Published by:Janvi
  First published:

  Tags: Python, Uttar pradesh, Viral Video