சீனாவில் ஓராண்டாக ஊருக்குள் சுற்றித்திரியும் 15 யானைகள் - 1 மில்லியன் டாலர் சேதம்!

சீனாவை பயமுறுத்தும் யானைக் கூட்டம்

இதுவரைக்கு இந்த யானைக்கூட்டம் ஏற்படுத்திய சேதம் சுமார் ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் என கணக்கிடப்பட்டுள்ளது

  • Share this:
சீனாவில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானைக்கூட்டம் ஒன்று கடந்த ஓராண்டாக ஒரு மில்லியன் டாலர் அளவுக்கான சேதத்தை ஏற்படுத்தியுள்ளன

சீனாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஆசிய யானைக் கூட்டம் ஒன்று கடந்த ஓராண்டாக பல்வேறு இடங்களில் சுற்றித் திரிந்து வருகின்றன. செல்லும் இடங்களில் இருக்கும் பயிர்களை சேதப்படுத்தும் யானைக்கூட்டம், நகரப்பகுதிகளிலும் உலா வருகிறது. சோளக்கருது தோட்டங்கள், வாழைத் தோட்டங்களில் புகுந்தால் முழுமையாக காலி செய்துவிட்டு வெளியேறுகின்றன. இதுவரைக்கு இந்த யானைக்கூட்டம் ஏற்படுத்திய சேதம் சுமார் ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் என கணக்கிடப்பட்டுள்ளது.

இரவு நேரங்களில் நகரப்பகுதிகளுக்குள் நுழையும் யானைக்கூட்டம் சாலைகளில் இயல்பாக உலவுகின்றன. பொருட்கள், கடைகளுக்கு முன் வைக்கப்பட்டிருக்கும் பேனர்கள் ஆகியவற்றையும் அடித்து நொறுக்கின்றன. யானைகளின் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. சிஜூவாங்பன்னா (Xishuangbanna) வனப்பகுதியில் வசிக்கும் ஆசிய காட்டு யானைகள் என்பது தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளது. 15 யானைகள் குழுவாக ஒன்றாக சுற்றித் திரியும் அவை, சிஜூவாங்பன்னா தேசிய வனப்பகுதியில் இருந்து சுமார் 500 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வழியில் தென்படும் பயிரிடப்பட்ட காடுகளை முற்றிலுமாக அழித்துவிடுகின்றன. அதிகாரிகளின் தகவல்படி, யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறியது முதல் இதுவரை சுமார் 56 ஹெக்டேர் பரப்பளவிலான பயிர்களை சேதப்படுத்தியுள்ளது. அதனால் சுமார் 1 மில்லியன் அமெரிக்க டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் உத்தேசமாக கணிக்கப்பட்டுள்ளது. யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறியது எப்படி? என்ற தகவல் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. மேலும், யானைகள் இவ்வளவு தொலைவு பயணிக்கும் வரை, அதிகாரிகள் தடுத்து நிறுத்தாமல் விட்டது ஏன்? போன்ற கேள்விகள் எழுந்துள்ளன.

Also Read:   இரவு உணவிற்கு சாலட் தராததால் மனைவியை கொன்ற கொடூரன்.. உத்தரபிரதேசத்தில் சோகம்!

யானைகள் தற்போது பயணிக்கும் வழிகளை பின்தொடரும் அதிகாரிகள், அந்தப் பகுதியில் இருக்கும் மக்களை முன்னெச்சரிக்கையாக இடம்பெயருமாறு அறிவுறுத்துகின்றனர். மனிதர்கள் யாரையும் யானைகள் இதுவரை தாக்கவில்லை. ஊருக்குள் புகும் யானைகளை அப்பகுதி மக்கள் திசைதிருப்பி விட்டுவருகின்றனர்.கற்களை வைத்தும், வண்டிகளை நிறுத்தியும் சாலைகளை அடைத்து, யானைகளை மீண்டும் வந்த பாதை வழியே திருப்பும் முயற்சியும் மேற்கொள்ளப்படுகிறது. குன்மிங் மாகாணத்திற்கு சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் தற்போது யானைக்கூட்டம் இருப்பதாக சீன செய்தி ஊடகம் ஒன்று கூறியுள்ளது.

Also Read:   டியூஷன் படித்து வந்த 17 வயது மாணவருடன் மாயமான ஆசிரியை!

அரசு சார்பில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. 360 பேர் அடங்கிய குழு, 76 கார்கள் மற்றும் டிரோன் கேமராக்கள் பயன்படுத்தப்பட்டு யானைகளை மீண்டும் வனப்பகுதிக்கு அழைத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் சிஜூவாங்பன்னாவில் இருந்து அவை வெளியேறி இருக்கின்றன. யுனான் பகுதியில் 6 மாதங்களாக இருந்த யானைக்கூட்டத்தில், பெண் யானை ஒன்று குட்டியை ஈன்றுள்ளது. ஒரு மாதத்துக்குப் பிறகு மீண்டும் பயணத்தை தொடங்கியுள்ளன.
Published by:Arun
First published: