HOME»NEWS»TREND»14 month old baby with life threatening disease gets surgery costing rs 16 crore after winning lottery vin ghta

உயிருக்கு ஆபத்தான நோயுடன் போராடிய 14 மாத குழந்தையை காப்பாற்றிய 'லாட்டரி' தொகை!

பாத்திமா என்ற பச்சிளங் குழந்தை மோசமான தசை கோளாறால் பாதிக்கப்பட்டு முற்றிலும் சோகமயமான எதிர்காலத்தை கொண்டிருந்தார், ஆனால் அதிர்ஷ்டவசமாக ஒரு 'லாட்டரியின்' மூலம் குழந்தை இப்போது நகரத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் 'புரட்சிகர' மரபணு சிகிச்சை செய்த பின் ஒரு புதிய வாழ்க்கை வாழ துவங்கியுள்ளார். 

உயிருக்கு ஆபத்தான நோயுடன் போராடிய 14 மாத குழந்தையை காப்பாற்றிய 'லாட்டரி' தொகை!
பாத்திமா என்ற பச்சிளங் குழந்தை மோசமான தசை கோளாறால் பாதிக்கப்பட்டு முற்றிலும் சோகமயமான எதிர்காலத்தை கொண்டிருந்தார், ஆனால் அதிர்ஷ்டவசமாக ஒரு 'லாட்டரியின்' மூலம் குழந்தை இப்போது நகரத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் 'புரட்சிகர' மரபணு சிகிச்சை செய்த பின் ஒரு புதிய வாழ்க்கை வாழ துவங்கியுள்ளார். 
  • News18
  • Last Updated :
  • Share this:

விவரிக்க முடியாத பல கொடிய நோய்கள் காரணம் இன்றியும் அல்லது பிற காரணங்களாலும் வயதானவர்கள் மட்டுமல்ல வாழ்க்கையை துவங்காத பச்சிளம் குழந்தைகளையும் தாக்குகிறது. இதில் ஏழை பணக்காரர் என்ற பாரபட்சம் பார்த்து நோய்கள் வருவதில்லை இதுபோன்ற நோய்கள் வந்தால் நோயை குணப்படுத்துவதற்கான பணவசதி பெரும்பான்மையான குடும்பங்களில் இருப்பதில்லை அதுபோன்ற நேரங்களில் அப்படியே விட்டு விடுவதும் உண்டு. யாரோ ஒரு சிலர் மட்டும்தான் அதிர்ஷ்டத்தின் துணைகொண்டு உயிர் பிழைத்து வாழ்வார்கள். 

அந்த வகையில் இதுபோன்ற ஒரு செய்தியை தான் இந்த பதிவில் நாம் காணப்போகிறோம். வெறும் பதினான்கு மாதமேயான பாத்திமா என்ற பச்சிளங் குழந்தை மோசமான தசை கோளாறால் பாதிக்கப்பட்டு முற்றிலும் சோகமயமான எதிர்காலத்தை கொண்டிருந்தார், ஆனால் அதிர்ஷ்டவசமாக ஒரு 'லாட்டரியின்' மூலம் குழந்தை இப்போது நகரத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் 'புரட்சிகர' மரபணு சிகிச்சை செய்த பின் ஒரு புதிய வாழ்க்கை வாழ துவங்கியுள்ளார். 

கர்நாடகாவின் கடலோர பகுதியான உத்தர கன்னட மாவட்டத்தில் உள்ள பட்கல் நகரத்தைச் சேர்ந்த முகமது பசில் மற்றும் கதீஜாவின் மகள் பாத்திமா, கடந்த மாத இறுதியில் பெங்களூரு பாப்டிஸ்ட் மருத்துவமனையில் (Bangalore Baptist Hospital) மரபணு சிகிச்சையான 'சோல்கென்ஸ்மா' (Zolgensma) வழங்கப்பட்ட பின்னர் குழந்தையின் உடல்நிலை கொஞ்சம் கொஞ்சமாக தேறி வருகிறது. Drug நிறுவனமான நோவார்டிஸின் கருணையுள்ள அணுகல் திட்டத்தின் மூலம் குழந்தை "லாட்டரியின் அதிர்ஷ்ட வெற்றியாளர்" என்று அறிவிக்கப்பட்டது. இதுபோன்ற சிகிச்சை முறை பணக்காரர்கள் மட்டுமே செய்யக்கூடியது, ஆனால் இப்பொழுது இந்த குழந்தைக்கு கிடைத்திருப்பது உண்மையில் பேருதவி தான் என்று சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையை தெரிவித்துள்ளது. மருத்துவமனை இயக்குநர் (தலைமை நிர்வாக அதிகாரி) நவீன் தாமஸ், "இந்த மருந்தின் விலை சுமார் 2.1 மில்லியன் அமெரிக்க டாலர்கள், அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ .16 கோடி" என்று கூறினார். 

குழந்தையின் உடல்நிலையில் இப்போது "படிப்படியாக முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. இப்போது குழந்தை தன் காலை நகர்த்த முடிகிறது. சாதாரண குழந்தைகளைப் போல ஓடி ஆட கொஞ்சம் நேரம் எடுக்கும்" என்று அவரது தந்தை பசில் PTI க்கு தெரிவித்தார். தாமஸின் கருத்துப்படி, இப்போது தான் நடக்க ஆரம்பிக்கும் குழந்தைக்கு முதுகெலும்பு தசைக் குறைபாடு அல்லது எஸ்.எம்.ஏ (Spinal Muscular Atrophy or SMA) என்ற சிக்கல் இருப்பது கண்டறியப்பட்டது, 

இது நரம்பு செல்கள் இழப்பால் ஏற்படுகிறது, மேலும் இது மூளையில் இருந்து தசைகளுக்கு மின் சமிக்ஞைகளை கொண்டு செல்கிறது. இந்த சமிக்ஞைக்குத் தேவையான புரதம் ஒரு மரபணுவால் குறியிடப்படுகிறது, இதற்காக பெற்றோர்கள் இருவரிடமும் இரண்டு பிரதிகள் உள்ளன. இரண்டு பிரதிகளிலும் சிக்கல் இருந்தால் மட்டுமே ஒரு குழந்தை இதுபோன்ற கோளாறில் சிக்கிக்கொள்ளும் என்று அவர் கூறினார். ஆனால் பிரச்சனை என்னவென்றால், இந்த சிகிச்சையானது பெரும்பாலான மக்களுக்கு கிடைப்பதில்லை. 

Also read... காதலியை இம்ப்ரஸ் செய்த நபரை சிறையில் தள்ளிய காவல்துறையினர் - என்ன செய்தார் தெரியுமா?

"பல மில்லியனர்கள் மட்டுமே இந்த உயர் சிகிச்சையை விலைகொடுத்து செய்கின்றனர்! ஜோல்கென்ஸ்மா, மரபணு சிகிச்சை என்பது ஒரு புரட்சிகர சிகிச்சையாகும், இது தவறான மரபணுவை மாற்றுவதன் மூலம் நோயைக் குணப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது" என்று அவர் கூறினார். "கர்நாடகாவில் முதன்முறையாக, நோவார்டிஸின் கருணை அணுகல் திட்டத்தின் மூலம் லாட்டரி வென்ற அதிர்ஷ்டசாலி ஒரு குழந்தைக்கு சோல்கென்ஸ்மா சிகிச்சையானது பெங்களூர் பாப்டிஸ்ட் மருத்துவமனையில் செய்யப்பட்டது" உண்மையில் மகிழ்ச்சி என்று தாமஸ் கூறினார். 

இதேபோன்று இந்த தம்பதிகளின், முதல் குழந்தையும் SMAல் பாதிக்கப்பட்டு முன்னர் இறந்தது குறிப்பிடத்தக்கது. குழந்தை நரம்பியல் நிபுணர் மற்றும் நரம்புத்தசை நிபுணர் டாக்டர் ஆன் ஆக்னஸ் மேத்யூ , "21 ஆம் நூற்றாண்டின் 21ம் ஆண்டின் 21ம் தேதியில் , குழந்தைக்கு ஊசி போடப்பட்டது, இது இந்த அரிய நோய்க்கான முதல் ஷாட் சிகிச்சையாகும்" என்று கூறினார். தற்போது சுமார் 200 குழந்தைகள் பாப்டிஸ்ட் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர், இந்த மருத்துவமனை மரபணு நோய்களில் நிபுணத்துவம் பெற்றது, மேலும் குறிப்பாக SMA மற்றும் டுச்சேன் மஸ்குலர் டிஸ்டிராபி (Duchenne muscular dystrophy (DMD)) என்று மருத்துவர் கூறினார். கடந்த வருடம் மட்டும், இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 38 குழந்தைகள் இந்த விலையுயர்ந்த சிகிச்சை இல்லாமலே உயிரிழந்தனர். உயிரிழந்த குழந்தைகளில்  பேபி பாத்திமா போன்று அதிர்ஷ்டசாலி அதில் யாரும் இல்லை என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: