ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

மும்பை பிரபல மருத்துவமனையின் அடியில் 132 வருடப் பழமையான சுரங்கம் கண்டுபிடிப்பு!

மும்பை பிரபல மருத்துவமனையின் அடியில் 132 வருடப் பழமையான சுரங்கம் கண்டுபிடிப்பு!

132 வருடப் பழமையான சுரங்கம்

132 வருடப் பழமையான சுரங்கம்

மும்பையில் உள்ள அரசு மருத்துவமனை அடியில் 132 வருடப் பழமையான சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Mumbai, India

  மும்பையில் அரசு நடத்தும் ஜே.ஜே. மருத்துவமனையின் அடியில் ரகசியமாக இருந்த 200 மீட்டர் சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அது சுமார் 132 வருடம் பழமைவாய்ந்தது என்று கருதப்படுக்கிறது.

  ஜனவரி 27, 1890 இல் ஆங்கிலேய ஆட்சியில் பாம்பேவின் கவர்னராக இருந்த லார்டு ரேய் இந்த மருத்துவமனைக்கான அடிக்கல்லை நிறுவியுள்ளார். அதன் பின்னர் மார்ச் 15, 1892 இல் ஜான் ஆடம்ஸ் என்றவர் கட்டிடத்தை வடிவமைத்துள்ளார். முதலில் சர் டின்ஷா மனோக்ஜி பெட்டிட் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான மருத்துவமனையாக இருந்து பின்னர் நர்சிங் கல்லூரி அங்குத் தொடங்கப்பட்டது. தற்போது ஜே.ஜே. மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியாகச் செயல்பட்டு கொண்டியிருக்கிறது.

  இந்த நிலையில், தண்ணீர் வழிவதைக் கண்டறிவதற்காக வந்த மருத்துவர் ஒருவர் ஒரு பாதை இருப்பதைக் கண்டுபிடித்துள்ளார். ஆர்வத்தில் அதனைத் தோண்டி உள்ளே நுழைந்து பார்த்ததில் அது ஒரு 200 மீட்டர் அளவுள்ள சுரங்கத்திற்குச் சென்றுள்ளது.

  அதனின் உள்ளே மேலும் திறக்கப்படாத கதவுகள் இருந்துள்ளது. செங்கற்களால் உருவாக்கப்பட்ட தூண்கள் மூலம் சுரங்கம் அமைக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

  Also Read : நேரலையில் செய்தியாளரின் தோளில் அமர்ந்து ஏர்பாட் திருடிய கிளி -வைரலாகும் வீடியோ

  இது குறித்து, மருத்துவமனை நிர்வாகம் தொல்லியல் ஆய்வகத்திற்குத் தெரிவித்துள்ளனர். மருத்துவமனையின் வரைபடத்திலும் அந்த சுரங்கப் பாதை இருப்பதற்கான வடிவமைப்பு இல்லை என்று கூறப்பட்டுள்ளது.

  மருத்துவமனையின் பின் புறத்திலும் அதே வடிவமைப்பில் ஒரு கட்டிடம் உள்ளது என்பதால் இந்த சுரங்கப் பாதை அதனை இணைப்பதாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேற்கொண்டு தொல்லியல் ஆய்வாளர்கள் மூலம் ஆய்வு நடத்தப்படவுள்ளது என்று கூறியுள்ளனர்.

  Published by:Janvi
  First published:

  Tags: Hospital, Mumbai