பிரிட்டனைச் சேர்ந்த தோட்டக்கலை நிபுணர் ஒருவர், செடியின் ஒரே தண்டில் அதிகபட்சமாக 1200 தக்காளிகலை வளர்த்து உலக சாதனை புத்தகமான கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.
உலகம் முழுவதும் உள்ள மக்கள் வித்தியாசமான முயற்சிகள் மூலமாக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து வருகின்றனர். முடி, நகத்தை நீளமாக வளர்த்து சாதனை படைப்பவர்கள் மத்தியில், பூசணிக்காய், தக்காளி உள்ளிட்ட காய்கறிகளை பிரம்மாண்டமாக, புதிய விதத்திலும் படைத்து உலக சாதனை புத்தகத்தில் இடம் பெறுபவர்கள் ஏராளம்.
இங்கிலாந்தின் ஸ்டான்டெட் அபாட்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் டக்ளஸ் ஸ்மித். ஐ.டி நிறுவனம் ஒன்றில் மேலாளராக பணியாற்றி வரும் அவர், விவசாயத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவராக உள்ளார். தனது வீட்டிற்கு பின்புறத்தில் பிரத்யேக தோட்டம் ஒன்றை அமைத்துள்ள டக்லஸ், அதில் விதவிதமான காய்கறிகளை வளர்த்து வருகிறார். பல்வேறு ஆராய்ச்சி இதழ்கள் ஆகியவற்றை படித்து, காய்கறிகளை இயற்கை முறையிலேயே, வித்தியாசங்களை புகுத்தி அதிக உற்பத்தியை சாத்தியமாக்கி வருகிறார்.இவர் தனது தக்காளி செடியில் ஒரே தண்டில் 1200 தக்காளிகளை விளைய வைத்து உலக சாதனை படைத்துள்ளார்.
மார்ச் 9, 2022 அன்று, கின்னஸ் உலக சாதனைகள் அமைப்பு அதிகாரப்பூர்வமாக ஸ்மித் தனது பசுமை வீட்டில் வளர்க்கப்பட்ட தக்காளிகள் மூலமாக தனது முந்தைய சாதனைகளை முறியடித்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஏனென்றால் தக்காளி பழத்தை வைத்து ஏற்கனவே ஸ்மித் பல சாதனைகளை படைத்துள்ளார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், ஒரே தண்டில் இருந்து 839 தக்காளிகளை அறுவடை செய்து சாதனை படைத்தார்.
மேலும் 2020 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் மிக உயரமான சூரியகாந்தி செடியை வளர்த்தி சாதனை படைத்திருந்தார். 2020ஆம் ஆண்டில், ஸ்மித் 3.1 கிலோ எடையுள்ள உலகின் மிகப்பெரிய தக்காளியை வளர்த்து மற்றொரு சாதனையைப் படைத்தார். அதன் மூலம் 2.8 கிலோ எடையுள்ள தக்காளியை பயிரிட்ட பீட்டர் கிளேஸ்புரூக்கின் சாதனையை முறியடித்திருந்தார்.
நடுவானில் பாராசூட் கயிற்றில் நடந்து உலக சாதனை செய்த வினோத மனிதர் - திக் திக் நொடிகள்!
இந்த செடியின் உயரம் மட்டும் 20 அடி ஆகும், அவர் வளர்த்த தக்காளி செடியின் உயரம் 27.5 இன்ச் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பலனாக தனது தோட்டத்தில் உள்ள தக்காளி செடியின் ஒரு தண்டில் 1200 தக்காளிகளை விளைவித்து உலக சாதனை படைத்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “புதிய கின்னஸ் உலக சாதனை!
ஒரே தண்டில் 1,269 தக்காளிகள் என்ற எனது சாதனை இப்போது அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். கடந்த ஆண்டை விட 839 என்ற எனது சொந்த சாதனையை இது முறியடித்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார். டக்லஸின் இந்த ட்வீட்டிற்கு பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் குவிந்து வருகின்றன. ஏராளமானோர் எப்படி ஒரே தண்டில் 1200 தக்காளிகளை வளர்த்தீர்கள் என டக்லஸ் ஸ்மித்திடம் ஆலோசனை கேட்டும் வருகின்றனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.