ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

பாலைவனத்தின் நடுவே ஆடம்பர வீடு.. விலையை கேட்டால் ஆச்சர்யபடுவீங்க..

பாலைவனத்தின் நடுவே ஆடம்பர வீடு.. விலையை கேட்டால் ஆச்சர்யபடுவீங்க..

காட்சி படம்

காட்சி படம்

பாலைவனத்தின் நடுவே ரூ.12.8 கோடி மதிப்பில் கட்டப்படவுள்ள வீட்டை பற்றி தெரியுமா ?

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

பல போராட்டமும், மன அழுத்தமும் நிறைந்த இந்த வாழ்க்கை ஓட்டத்திற்கு ஒரு பிரேக் விட்டு விட்டு, எந்த ஒரு சலசலப்பும் இல்லாத அமைதியான இடத்தில் நிம்மதியாக வாழ யார் தான் விரும்பமாட்டார்கள். அமைதியான மற்றும் இயற்கையான வாழ்க்கையை வாழ விரும்பும் சிலர், மலையேற்றம், கேம்ப் போன்ற விஷயங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் நீங்கள் இயற்கையான சூழல் கொண்ட அமைதியான வாழ்க்கையோடு நவீன வீட்டில் இருக்கும் வசதிகளை அனுபவிக்க விரும்புகிறீர்கள் என்றால், இந்த அமெரிக்க நிறுவனத்தின் புதிய படைப்பு உங்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தும்.

எல் சிமெண்டோ யூனோ என்று பெயரிடப்பட்ட ஒரு தனிமைப்படுத்தப்பட்ட நவீன வீடு, கலிபோர்னியாவின் ஜோசுவா ட்ரீ என்ற பாலைவனத்தின் நடுவில் கட்டப்பட்டு வருகிறது. மேலும், இந்த நவீன வீடு $ 1.75 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான விலையில் விற்பனைக்கு வருகிறது. அதாவது இந்த வீடு இந்திய மதிப்பில் ரூ.12.8 கோடி இருக்குமாம். மொஜவே பாலைவனத்தில் ஐந்து ஏக்கர் பரப்பளவை கொண்ட மக்கள் வசிக்காத நிலத்தில் அமைந்துள்ள இந்த தனிமைப்படுத்தப்பட்ட வீடு, பெரிய கற்பாறைகள் மற்றும் இயற்கை புல்வெளிகளால் சூழப்பட்ட தரிசு நிலத்தின் நடுவே அமைத்துள்ளது.

நிறுவனத்தின் கூற்றுப்படி, இந்த வீடு RSG3D தொழில்நுட்ப கட்டிட அமைப்பைப் பயன்படுத்தி கட்டப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. அதாவது கான்கிரீட் மற்றும் நுரையால் செய்யப்பட்ட 3D பேனல்களை கொண்ட தொழில்நுட்பம் தான் அது. இந்த வீட்டில் ஒரு உள்ளமைக்கப்பட்ட நூலகம் மற்றும் ஒரு பிரத்யேக ரீடிங் கார்னரும், பாலைவன இரவில் வெளிச்சத்திற்காக கஸ்டம் LED விளக்குகள் ஆகியவையும் இருக்கும்.

இந்த தனித்துவமான வீட்டை குறித்து நிறுவனம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, " இந்த இடம் தனித்துவம் வாய்ந்தது. மேலும் இது மக்களுக்கு சிறப்பு வாய்ப்பாக அமையும். இந்த தனித்துவமான வீட்டில் இருப்பது, கற்பாறைகளுக்கு நடுவே உங்கள் சொந்த பூங்காவை அனுபவிப்பதை போன்ற அனுபவத்தை வழங்குகிறது. 'எல் சிமெண்டோ யூனோ' என்பது KUD மேம்பாட்டிலிருந்து சமீபத்திய உருவாக்கம் மற்றும் URBARC கட்டிடக் கலைஞர்களால் வடிவமைக்கப்பட்டது. கான்கிரீட் மற்றும் நுரையால் கட்டப்பட்ட இந்த RSG3D கட்டிட அமைப்பு கொண்ட வீடு ஒரு புதிய செயல்திறனை உங்களுக்கு வழங்கும்" என்று குறிப்பிட்டுள்ளது.
 

 
View this post on Instagram

 

A post shared by KUD Properties (@kudproperties)Also Read : உலகின் தனிமையான திமிங்கலம் தன்னைத் தானே துன்புறுத்திக் கொள்ளும் வீடியோ..

மாநகர கட்டிடக்கலை விண்வெளி குழுவின் வடிவமைப்புகள் மற்றும் குட் டெவலப்மென்ட் கட்டும் செயல்பாட்டின் அடிப்படையில், கான்கிரீட்டில் மூலம் இந்த வீடு வடிவமைக்கப்பட்டுள்ளது. மளிகை கடைக்கு செல்லவோ அல்லது மக்களை சந்திக்கவோ விரும்பும் எவரும் அந்த வீட்டில் இருந்து கார் அல்லது பைக் சவாரி செய்ய வேண்டும். இந்த வீடு 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தயாராகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வீடு பார்ப்பதற்கு அதிநவீனமாக இருந்தாலும், விலையை கேட்டால் தலையே சுற்றுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: California