இணையத்தில் எத்தனையோ விஷயம் டிரெண்டாகும். அதில் உப்புசப்பில்லாத பல விஷயங்களும் அடங்கும். ஆனால், சமீபத்தில் இணையத்தில் ட்ரெண்டாகி வருவது 11 வயது பார்வையற்ற சிறுவன்! ஒருநாள் முதல்வர், ஒருநாள் தலைவர் என்ற ரீதியில் போட் நிறுவனத்தின் ஒரு நாள் சி இ ஓ வாக பதவி ஏற்றிருக்கிறார் 11 வயது சிறுவன். இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்ட வீடியோ லட்சக்கணக்கான பார்வையாளர்களை சென்றடைந்து, நெட்டிசன்களிடையே கமெண்ட்டுகளை வாரிக் குவித்து வருகிறது.
உலகெங்கிலும் திறமை கொட்டிக் கிடக்கிறது. சரியான இடத்தில் திறமையை வெளிப்படுத்துவது எந்த அளவுக்கு சவாலாக இருக்கிறதோ, அதேபோல சரியான திறமையை கண்டறிவதும் சவாலாகத்தான் இருக்கிறது. ஆன்லைன் போட்டிகள், குவிஸ், கான்ட்ஸ்ட்டுகள், மற்றும் ரியாலிட்டி ஷோக்கள் வழியாக டேலன்ட்டுகள் கண்டறியப்பட்டு வருகின்றன. அதில் கண்டெடுக்கப்பட்ட பொக்கிஷம் தான் பிரதமேஷ் என்ற சிறுவன்.
பிரதமேஷ் சின்ஹா என்ற சிறுவன், ஷார்க் டான்க் இந்தியா என்ற ஷோவில் கலந்து கொண்டு, கேட்ஜட்டுகளுக்கான பிசினஸ் ஐடியாவை பகிர்ந்தது பற்றி பலரும் அறிந்திருப்பார்கள். பார்வையாளர்களுக்கான பிரைலி மொழியில் கேட்ஜட்டுகளை உருவாக்குவது பற்றி யோசனை கொடுத்திருந்தார். கணிசமான எண்ணிக்கையில் உள்ள பார்வையற்றவர்களும், கேட்ஜெட்டுகளைப் பயன்படுத்த உதவியாக இருக்கும் யோசனையைப் பகிர்ந்து கொண்ட, பிரதமேஷை, போட் நிறுவனத்தின் தலைவரான அமன் குப்தா தனது ஹெட் ஆஃபீசுக்கு அழைப்பிதழ் விடுத்திருந்தார். அது மட்டுமில்லாமல், சிறுவனை ஒரு நாள் CEO ஆகவும் அறிவித்தார்.
போட் தலைவரும், ஒரு நாள் CEO வும் நாள் முழுவதும் ஒன்றாக செலவு செய்தனர். அதில் ஒரு பகுதியை வீடியோவாக இன்ஸ்டாவில் பகிர்ந்திருந்தார்கள். பல ஆக்கப்பூர்வமான விஷயங்களைப் பேசிய பிரதமேஷ், வேடிக்கையாகவும் பேசியிருந்தார். அதில் அமன் குப்தாவுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை குடுப்பதாகவும் கூறினார். பேச்சின் இறுதியில், அனைவரையும் நெகிழச்செய்யும் வகையில் உருக்கமாக பேசினார். “எவ்வளவு நாட்கள் தான் என்னை அழ வைத்துப் பார்ப்பாய் வாழ்க்கையே, என்னுடைய தைரியத்தையும், மன உறுதியையும் பார்த்து நீ ஒரு நாள் சோதிப்பதை நிறுத்தி விடுவாய்” என்று பிரதமேஷ் பேசியிருந்தார்.
அது மட்டுமிலாமல், அமன் குப்தா, பிரதமேஷுக்காக ஒரு சிறப்பு ஸ்காலர்ஷிப்பும் ஏற்பாடு செய்திருந்தார். மேலும், “லட்சக்கணக்கானவர்கள் முகத்தில் புன்னகையை வரவழைத்த சிறுவனை அனைவரும் சேர்ந்து கொண்டாடுவோம். இச்சிறுவனுக்கு நல்ல தரமான, அவர் விரும்பும் கல்வியை வழங்க நாங்கள் புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளோம்” என்று தெரிவித்திருந்தார்.
Also see... ரூ.2 கோடிக்கு ஏலம் போன சாண்ட்விச்சிற்கு ஈடாக கிடைத்த ஓவியம்.!
இந்த வீடியோவை இது வரை 40 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பார்த்துள்ளனர். அது மட்டுமின்றி, ஆயிரக்கணக்கானவர்கள், தங்கள் அன்பை, கமெண்ட் மூலமாக வெளிப்படுத்தி இருந்தார்கள். மேலும், இப்படி ஒரு அழகான, வேடிக்கையான நாளை வழங்கியதற்காக அமன் குப்தாவை பலரும் பாராட்டி வருகின்றனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.