நோய்வாய்ப்பட்ட தனது பாட்டியை மெர்சிடிஸ் பென்ஸ் மூலம் காப்பாற்றிய 11 வயது சிறுவன் - நெட்டிசன்களை வியக்கவைத்த அசத்தலான நிகழ்வு

குளிரால் உடல் நடுங்கி உதவி தேவைப்படுவதைக் கண்ட 11 வயது பள்ளிச் சிறுவன் தனது பாட்டியின் உயிரைக் காப்பாற்ற காரை ஓட்டிச்சென்றுள்ள சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது.

நோய்வாய்ப்பட்ட தனது பாட்டியை மெர்சிடிஸ் பென்ஸ் மூலம் காப்பாற்றிய 11 வயது சிறுவன் - நெட்டிசன்களை வியக்கவைத்த அசத்தலான நிகழ்வு
11 வயது சிறுவன் பி.ஜே.
  • News18 Tamil
  • Last Updated: September 8, 2020, 10:30 PM IST
  • Share this:
ஒரு பேரனுக்கும், பாட்டிக்கும் இடையிலான பாசப் பிணைப்பு பெரும்பாலானோரின் இதயத்தைக் கவர்ந்தது. சமீபத்தில் 11 வயது சிறுவன் தனது பாட்டிக்குத் தேவைப்படும் நேரத்தில் எவ்வாறு உதவினான் என்பதை பற்றிய செய்தி இப்போது இணையத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

ஒரு பேஸ்புக் பதிவில் ஏஞ்சலா ப்ரூவர் லே என்ற மூதாட்டி தனக்கு உடல்நிலை சரியில்லாமல் இருக்கும்போது தனது பேரன் தனக்கு எப்படி உதவினான் என்ற அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில் வெறும் 11 வயதான சிறுவன் ஒரு மெர்சிடிஸ் பென்ஸை ஓட்டிச்சென்று தனது பாட்டியைக் காப்பாற்றியுள்ளான்.

தனது பேரன் பி.ஜே சொகுசுக் காரை ஓட்டுவதைக் காணக்கூடிய ஒரு கிளிப்பையும் அந்த மூதாட்டி பகிர்ந்துள்ளார். அந்தப் பதிவில் ஒரு சிறுவன் எப்படி தனது வாழ்க்கையைக் காப்பாற்றினான் என்பதைக் கூறியுள்ளார். மேலும் அந்த வீடியோவில் அச்சிறுவனின் பாட்டி, கர்த்தராகிய இயேசு என் கிராண்ட்பேபி பி.ஜே.வுக்காக நன்றி! அவன் என் உயிரை மீட்டவன் என்றும் அவனுக்காக உம்மிடம் வேண்டுகிறேன் என்றும் பகிர்ந்திருந்தார்.


நான் சம்பவம் நடைபெற்ற தினத்தன்று மதியம் என் வீட்டிலிருந்து ஒரு மைல் தூரத்தில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தேன். அப்போது திடீரென என் ரத்த குளுக்கோஸ் 40க்குக் கீழே குறைந்தது. என்னால் நடக்க முடியவில்லை. இதனைப் பார்த்த என் பேரன் பி.ஜே 4 சக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று உடனடியாக என்னைக் காப்பாற்றினான்.

Also read: மூதாட்டியிடமிருந்து 90 சவரன் நகை கொள்ளையடித்து சொகுசு வாழ்க்கை - தம்பதி கைதுமுதலில் பி.ஜே, மெர்சிடிஸுடன் என்னை மீட்க வருவதைப் பார்த்ததும் ஒரு முழுமையான அதிர்ச்சியாக இருந்தது என்பதையும் அவர் தனது பதிவில் கூறியுள்ளார். “திடீரென்று என் மெர்சிடிஸ் பென்ஸ் என்னை நோக்கி வருவதைக் கண்டேன். வாகனத்தில் யார் என்று யோசித்தேன். ஆம் 11 வயதான என் பேரன் பி.ஜே தான் அதனை இயக்கினார். ஆனால் அவன் அம்மாவை விட சிறப்பாக கார் ஓட்டினான்” என்று குறிப்பிட்டுள்ளார்.மேலும், எஸ்யூவி, கேம்ரி, டிரக் அல்லது கமரோ ஆகியோரின் சாவியை ஏன் எடுக்கவில்லை என்று அவரிடம் கேட்டபோது, தனக்குக் கிடைத்த முதல் சாவியை எடுத்துக்கொண்டதாக அவர் பதிலளித்தார் என்றும் அந்த மூதாட்டி குறிப்பிட்டுள்ளார்.

இதற்குப் பதிலளித்த ஒருவர், “என்ன ஒரு ஆசீர்வாதம்! நீங்கள் நன்றாக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்" எனக் கூறியுள்ளார். மற்றொருவர், "ஆச்சரியமாக இருக்கிறது, கடவுள் உங்களிடம் மகிமையாக இருப்பார். உங்களுக்கும், உங்கள் அற்புதமான பேரனுக்கும் அவரின் ஆசீர்வாதம் இருக்கும்” என்று கூறியுள்ளார்.
First published: September 8, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading