ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

அறிவியல் கண்காட்சி... காட்சிப்படுத்தும்போது வெடித்த ராக்கெட்.. 11 மாணவர்கள் காயம்!

அறிவியல் கண்காட்சி... காட்சிப்படுத்தும்போது வெடித்த ராக்கெட்.. 11 மாணவர்கள் காயம்!

கல்லூரி அறிவியல் மாடல் வெடி விபத்து

கல்லூரி அறிவியல் மாடல் வெடி விபத்து

காயமடைந்த மாணவர்கள் யாரும் ஆபத்தான நிலையில் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Jharkhand, India

ஜார்க்கண்ட் மாநிலம் கிழக்கு சிங்பூம் மாவட்டத்தில் உள்ள காட்ஷிலா கல்லூரியில் திங்கள்கிழமை நடந்த மாதிரி கண்காட்சியின் போது அறிவியல் ப்ராஜக்ட் ஒன்று வெடித்ததில் 11 மாணவர்கள் காயமடைந்தனர்.

ஏஎன்ஐ செய்தி நிறுவனத்தால் இந்த சம்பவம் குறித்த வீடியோ ஒன்று பகிரப்பட்டது. அதில், அறிவியல் மாதிரி ஒன்றை சுற்றி பல மாணவர்கள் சூழ்ந்து நின்றுகொண்டு இருந்தனர். அப்போது காட்ஷிலா கல்லூரியில் இரண்டு மாணவர்கள் அதைக் காட்சிப்படுத்த தயார் செய்துகொண்டு இருந்தனர்.

ராக்கெட் போன்ற மாடலை ஒரு மாணவர் சரியாக செயல்படுத்தி காட்ட முயற்சிப்பதையும் காணலாம். மாணவர் தனது அறிவியல் திட்ட மாதிரியை சரிசெய்து காண்பிக்கும் போது, ​​​​திடீரென்று அது வெடித்தது. உடனே அங்கிருந்த மாணவர்கள் சிதறி ஓடும் காட்சியை வீடியோ  காட்டுகிறது.

இந்த விபத்தில் சுற்றி நின்ற கூட்டத்தில் சுமார்  11 மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். கல்லூரியின்  பேராசிரியர் ஒருவரின் கூற்றுப்படி, காயமடைந்த மாணவர்கள் யாரும் ஆபத்தான நிலையில் இல்லை என்று தெரிகிறது.

ஆனால் பார்ப்பவரை பதறவைக்கும் காட்சியாக இந்த வீடியோ அமைந்துள்ளது. மேலும் தற்போது இந்த வீடியோ இணையத்தில் வேகமாக  பரவி வருகிறது.

First published:

Tags: Accident, Jharkhand