முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / இறந்துவிட்டார் என்று கூறி ஓய்வூதியத்தை நிறுத்திய அரசு - சாரட் வண்டியில் ஊர்வலமாக வந்த 102 வயது முதியவர்!

இறந்துவிட்டார் என்று கூறி ஓய்வூதியத்தை நிறுத்திய அரசு - சாரட் வண்டியில் ஊர்வலமாக வந்த 102 வயது முதியவர்!

வைரல் வீடியோ

வைரல் வீடியோ

Viral Video | ஊர்வலம் தொடங்கும் முன்பாக தன்னுடைய வயது, அடையாளம் போன்றவற்றை நிரூபிக்கும் வகையில் அடையாள ஆவணங்களை ஊடகங்கள் முன்பாக முதியவர் வெளியிட்டார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Haryana, India

ஒரு சில அரசு ஊழியர்களின் கவனக் குறைவு காரணமாக, அரசு அடையாள அட்டைகள் மற்றும் அரசு நலத்திட்டங்களில் பயன்பெறும் பயனாளர்கள் தொடர்பான தரவுகளில் குளறுபடிகள் ஏற்படுவது உண்டு. உதாரணத்திற்கு, நாம் மிகவும் அதிகப்படியான குளறுபடிகளை வாக்காளர் அடையாள அட்டையில் சந்தித்திருப்போம்.

வாக்காளர் அடையாள அட்டையில் நமது புகைப்படம் மாற்றப்பட்டிருக்கும் அல்லது நமது பெயரிலேயே இறந்த வேறொரு நபரை நீக்குவதற்கு பதிலாக, நம்முடைய பெயரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கி இருப்பார்கள். நம் மீது எந்த தவறும் இல்லை என்றாலும் கூட நாமே அலைந்து திரிந்து இந்த குளறுபடிகளை திருத்திக் கொள்ள வேண்டியிருக்கும்.

ஹரியானா மாநிலத்தின் ரோட்டக் பகுதியில் இதுபோன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது. காந்திரா கிராமத்தைச் சேர்ந்த துளிசந்த் என்ற 102 வயது நபர், முதியவர்களுக்கான ஓய்வூதியம் பெற்று வந்தார். இந்நிலையில், இந்த முதியவர் இறந்து விட்டார் என்று அரசு ஆவணங்களில் தவறான தகவல் பதிவு செய்யப்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து அவருக்கான ஓய்வூதியம் மறுக்கப்பட்டது.

Read More : பேய் பாலியல் சீண்டலில் ஈடுபடுவதாக நினைத்துக் கொண்டிருந்த பெண் - காத்திருந்த அதிர்ச்சி

முதல்வரின் தனிப்பிரிவில் புகார்

நூற்றாண்டை கடந்த இந்த முதியவருக்கு ஓய்வூதியம் மறுக்கப்பட்டது தொடர்பாக அவரது பேரன், முதல்வரின் தனிப்பிரிவில் ஒரு மாதத்திற்கு முன்பாக ஆன்லைன் மூலமாக புகார் பதிவு செய்தார். ஆனால் அதிகாரிகள் தரப்பில் இந்த புகாருக்கு எந்தவித பதிலும் அளிக்கப்படவில்லை.

சாரட் வண்டியில் ஊர்வலம்

தனக்கு ஓய்வூதியம் மறுக்கப்பட்டது குறித்து நீதி கேட்கும் வகையிலும், தான் இன்னும் உயிரோடுதான் இருக்கிறேன் என்பதை அரசாங்கத்திற்கு உரத்த குரலில் சொல்லும் வகையிலும் முதியவர் துளிசந்த் சாரட் வண்டியில் அரசு அலுவலகத்தை நோக்கி மேல, தாள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக புறப்பட்டார். கழுத்தில் பண மாலை ஒன்றை அவர் அணிந்திருந்தார். “உங்கள் மாமா உயிரோடுதான் இருக்கிறேன்’’ என்று தலைப்புடன் சாரட் வண்டி வந்தது.

https://twitter.com/psrajput75/status/1567895283992002560?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1567895283992002560%7Ctwgr%5E9f70a5d8e0fa2cbe62865a366a903c8781125885%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.timesnownews.com%2Fviral%2F102-year-old-haryana-man-dead-in-govt-records-shows-up-in-chariot-to-prove-hes-alive-demand-pension-article-94091639

இதுகுறித்து முதியவர் கூறுகையில் “கடைசியாக கடந்த மார்ச் மாதத்தில் எனக்கான ஓய்வூதியம் கிடைத்தது. அதற்கு பிறகு அரசு ஆவணங்களில் நான் இறந்து விட்டதாக தகவல் இருந்த காரணத்தினால், எனக்கான ஓய்வூதியத்தை நிறுத்திவிட்டனர். இதைத்தொடர்ந்து நான் உயிரோடுதான் இருக்கிறேன் என்று நிரூபிக்க பலமுறை முயற்சி செய்தும் அது பலன் அளிக்கவில்லை"என்று தெரிவித்தார்.

முதியவரின் போராட்டத்திற்கு ஆம் ஆத்மி கட்சியின் ஹரியானா மாநில முன்னாள் தலைவர் நவீன் ஜெய்ஹிந்த் ஆதரவளித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், “ஓய்வூதியத்தை நிறுத்தி முதியவர்களுக்கு மன வேதனையை அளிக்கும் நிகழ்வுகள் துரதிருஷ்டமானவை. முதல்வரின் தனிப்பிரிவில் மனு கொடுத்தும் கூட, முறையான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை’’ என்றார்.

முன்னதாக, ஊர்வலம் தொடங்கும் முன்பாக தன்னுடைய வயது, அடையாளம் போன்றவற்றை நிரூபிக்கும் வகையில் அடையாள ஆவணங்களை ஊடகங்கள் முன்பாக முதியவர் வெளியிட்டார்.

First published:

Tags: Haryana, Trending, Viral