Home /News /trend /

இறப்பதற்குள் கைதாக வேண்டும்.. சபதமேற்று நிறைவேற்றிய பாட்டி!

இறப்பதற்குள் கைதாக வேண்டும்.. சபதமேற்று நிறைவேற்றிய பாட்டி!

ஜீன் பிக்கென்டன்

ஜீன் பிக்கென்டன்

ஜீன் பல தசாப்தங்களாக இராணுவ செவிலியராக பணிபுரிந்தார். தனது 100 வருட வாழ்க்கையில் ஒரு முறை கூட சட்டத்தை மீறி செயல் புரிந்தது இல்லை.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India
எல்லா மனிதர்களுக்கும் வாழ்க்கை முடிவதற்குள் இதை செய்து முடிக்க வேண்டும் என்று ஒரு பக்கெட் லிஸ்ட் இருக்கு. ஒரு சிலருக்கு ஆழ்கடல்ல நடக்கணும், வானத்துல பார்க்கணும் என்று இருக்கும். ஒரு சிலருக்கு சில வினோத ஆசைகளும் இருக்கும்.

அப்படி தான் இந்த ஆஸ்திரேலியப் பெண்ணுக்கும் ஒரு ஆசை இருந்துள்ளது. ஜீன் பிக்கென்டன் ஒரு விஷயத்தை நீண்ட காலமாக செய்து முடிக்க விரும்பினார். அதைச் செய்ய அவர் தனது 100 வது பிறந்தநாளைத் தேர்ந்தெடுத்தார்.

அப்படி என்ன வினோத ஆசை என்கிறீர்களா? அவருக்கு, தான் கைது செய்யப்படவேண்டும் என்று ஆசையாம். தனது வாழ்க்கையின் பக்கெட் லிஸ்ட்டில் நீண்ட காலமாக நிறைவேறாத ஆசையாய் இருந்தது  இது தான் . இதை தனது 100 வைத்து பிறந்தநாளில் நிறைவேற்றியே ஆகவேண்டும் என்று உறுதி கொண்டுள்ளார்.

பயணிகள் கவனத்திற்கு : பெங்களூருவில் மிஸ் பண்ணக்கூடாத ஸ்பாட்கள் லிஸ்ட் இதோ!

ஜீன் பல தசாப்தங்களாக இராணுவ செவிலியராக பணிபுரிந்தார். தனது 100 வருட வாழ்க்கையில் ஒரு முறை கூட சட்டத்தை மீறி செயல் புரிந்தது இல்லை. குடிபோதையில் வாகனம் ஓட்டுவது, சாலை விதிகளை மீறுவது என்று எதுவுமே செய்ததில்லை. ஆனால் அவருக்கு கைது செய்யப்பட வேண்டும் என்று ஆசை.

100 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் ஜீனின் ஆசையைத் தெரிந்துகொண்ட ஆஸ்திரேலியாவின் விக்டோரியா காவல்துறை அவரது விருப்பத்தை நிறைவேற்ற முடிவு செய்தது. அவரது பிறந்தநாள் விழாவிற்கு சென்ற அதிகாரிகள் ஜீன் மீது போலிக் கைவிலங்குகளைப் போட்டு, அவரை நரகன் கார்டன்ஸ் குடியிருப்பு முதியோர் காப்பகத்திலிருந்து வெளியேற்றினர்.



பின்னர் தங்களது பேஸ்புக் பக்கத்தில் ஜீனுடன் எடுத்த புகைப்படத்தைப் பகிர்ந்து மகிழ்ச்சியுடன் வாழ்த்து தெரிவித்தனர்.

“இப்போது இதுபோன்ற கைதுகளை செய்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். பலருக்கு, கைது செய்யப்படாமல் வாழ்வது தான் விருப்பமாக இருக்கும். ஆனால் முன்னாள் செவிலியர் ஜீன் பிக்கெட்டன் கைது செய்யப்பட வேண்டும் என்று விரும்பியுள்ளார்.

அவரது 100 ஆவது பிறந்தநாளில் ஜீனின் விருப்பத்தை எங்கள் குழு நிறைவேற்றியதில் நாங்கள் மகிழ்ச்சி கொள்கிறோம்” என்று பதிவிட்டிருந்தனர்.
Published by:Ilakkiya GP
First published:

Tags: Arrest, Australia, Wishes

அடுத்த செய்தி