• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • 100 வயதிலும் உழைக்கும் முதியவர்.. காரணத்த கேட்டா நீங்களே கண்ணீர் விட்ருவீங்க..

100 வயதிலும் உழைக்கும் முதியவர்.. காரணத்த கேட்டா நீங்களே கண்ணீர் விட்ருவீங்க..

பேரக்குழந்தைகளின் கல்விக்காக பஞ்சாப்பை சேர்ந்த முதியவர் ஒருவர் 100 வயதிலும் காய்கறி விற்பனை செய்து வருவது அம்மாநில அரசின் கவனத்தை ஈர்த்துள்ளது

  • Share this:
வயது என்பது ஒரு பொருட்டல்ல, அது ஒரு எண் மட்டுமே என்பதை நிருபித்திருக்கிறார் பஞ்சாப்பை சேர்ந்த 100 வயது முதியவர் ஒருவர். வயது சதமடித்தாலும் குடும்ப வறுமையை போக்க அம்மாநில தெருக்களில் நாள்தோறும் தெருதெருவாக காய்கறிகளை விற்பனை செய்து வருகிறார். பஞ்சாப் மாநிலத்தின் மோகு பகுதியைச் சேர்ந்த ஹர்பன்ஸ் சிங்கிற்கு தற்போது 100 வயதாகிறது. அவரின் கவனிப்பில் பேரனும், பேத்தியும் வளர்ந்து வருகின்றனர்.

குழந்தைகளின் தந்தை 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட, தாய் குழந்தைகளை விட்டுவிட்டு சென்றுள்ளார். இதனால், இரண்டு குழந்தைகளையும் வளர்த்து வரும் முதியவர் ஹர்பன்ஸ் சிங், அவர்களின் உணவு மற்றும் கல்விக்காக நாள்தோறும் மோகு நகர் வீதிகளில் உருளைக் கிழங்கு உள்ளிட்ட காய்கறிகளை தள்ளுவண்டியில் தெருதெருவாக விற்பனை செய்து வருகிறார்.

தள்ளாத வயதிலும் கடுமையாக உழைக்கும் அவர் தள்ளுவண்டிகளை இழுத்துச் செல்லும் வீடியோக்கள் அண்மையில் சமூகவலைதளங்களில் வைரலானது. இதனைப் பார்த்த அம்மாநில முதலமைச்சர் அம்ரீந்தர் சிங், உடனடியாக முதியவர் ஹர்பன்ஸ் சிங்கிற்கு 5 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்திருப்பதுடன், குழந்தைகளின் கல்விக்கான உதவிகளையும் செய்வதாக உறுதியளித்துள்ளார்.

 


இதேபோல், உலகம் முழுவதும் பல்வேறு இடர்பாடுகளில் சிக்கியிருக்கும் மக்களுக்கு உதவிக்கரம் நீட்டி வரும் கல்சா அமைப்பும், முதியவர் ஹர்பன்ஸ் சிங்கிற்கு தேவையான உதவிகளை அளிக்க முன்வந்துள்ளது. அவருக்கு மாதந்தோறும் நிதியுதவி அளிப்பதாக தெரிவித்துள்ள கல்சா அமைப்பு, குழந்தைகளின் கல்விக்கான உதவிகளை வழங்க இருப்பதாக கூறியுள்ளது.

முதியவர் ஹர்பன்ஸ் சிங் தற்போதைய பாகிஸ்தானில் பிறந்தவர். 27 வயதாக இருக்கும்போது நாடு பிரிவினையை சந்தித்துள்ளது. இதனால் அங்கிருந்து இடம்பெயர்ந்து இந்திய பகுதிக்கு வந்த அவரது குடும்பம், பஞ்சாப்பின் மோகு பகுதியில் வசித்து வந்துள்ளது. முதலில் லோடு மேனாக இருந்த அவர், பின்னர் காய்கறி விற்பனையாளராக மாறியுள்ளார். இதுகுறித்து பேசிய ஹர்பன்ஸ் சிங், இந்தியா - பாகிஸ்தான் பிரிவினைக்குப் பின்னர் மோகு பகுதியில் தஞ்சமடைந்ததாக தெரிவித்தார்.

Also Read : காந்த கண்ணழகி! அம்மு அபிராமியின் லேட்டஸ்ட் போட்டோஸ்..

முதல் 20 ஆண்டுகள் லோடு மேனாக இருந்ததாகவும், அதன்பின்னர் கடந்த 40 ஆண்டுகளாக காய்கறிகளை விற்பனை செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். ஹர்பன்ஸ் சிங்கின் உழைப்பு தன்னை வியக்க வைப்பதாக பஞ்சாப் மாநில முதலமைச்சர் அம்ரீந்தர் சிங் கூறியுள்ளார். வாழ்க்கையில் எத்தனை தடைகள் வந்தாலும், அதனை விட்டுக்கொடுக்காமல் வீரனைபோல் எதிர்த்து போரிட வேண்டும் என புகழ்பெற்ற கவிஞர் ராபர்ட் பிராஸ்ட் தனது கவிதை ஒன்றில் தெரிவித்துள்ளார். அதற்கு நம்முன் நிகழ்கால சாட்சியாக 100 வயது முதியவர் ஹர்பன்ஸ் சிங் இருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Tamilmalar Natarajan
First published: