ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

விஷப்பூச்சியால் கடிபட்ட தங்கை.. தனி ஆளாக போராட்டத்தை கையில் எடுத்த 10 வயது அண்ணன்!

விஷப்பூச்சியால் கடிபட்ட தங்கை.. தனி ஆளாக போராட்டத்தை கையில் எடுத்த 10 வயது அண்ணன்!

தீவிரமாகப் போராடி வரும் 10 வயது அண்ணன்!

தீவிரமாகப் போராடி வரும் 10 வயது அண்ணன்!

சமீபத்தில் தெலுங்கானாவில் விஷப்பூச்சியால் கடிபட்டு, ஆபத்தான நிலையில் இருக்கும் தன்னுடைய தங்கைக்காக 10 வயது அண்ணன் செய்த விஷயம் இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  அண்ணன் தங்கை பாசம் பற்றி திரைப்படங்களில் மட்டுமல்லாமல் நிஜத்திலேயே பலரையும் பார்த்து இருப்போம். தங்கைக்காக என்ன வேண்டுமானாலும் செய்யக்கூடிய அண்ணன்கள் இன்னும் இந்த உலகில் இருக்கிறார்கள். சமீபத்தில் தெலுங்கானாவில் விஷப்பூச்சியால் கடிபட்டு, ஆபத்தான நிலையில் இருக்கும் தன்னுடைய தங்கைக்காக 10 வயது அண்ணன் செய்த விஷயம் இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

  10 வயது சிறுவனின் பெயர் கேசவா. இவரது மூத்த சகோதரியின் பெயர் வேதா ஸ்ரீ. வேதா ஸ்ரீயைத்தான் விஷப்பூச்சி ஒன்று கடித்துள்ளது. இந்த சிறுவனும் சிறுமியும் தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த பெடபள்ளி மாவட்டத்தில் ராமகுண்டம் பால்டியா, என்டிபிசி கௌதமி நகர் எக்-சர்வீஸ் காலனியில் வசித்து வருகிறார்கள். கடந்த புதன்கிழமை காலை இந்த சிறுமி ஜாகிங் சென்றிருந்த போது அங்கிருக்கும் விஷப்பூச்சியால் கடிபட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.

  இருவருமே சிறுவர்கள். 10 வயது சிறுவன் தன்னுடைய தங்கைக்காக என்ன செய்து விட முடியும்? மிஞ்சி மிஞ்சி போனால் அவரை தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றிருக்கலாம் அல்லது ஓடிச் சென்று தகவல் கொடுத்திருக்கலாம். ஆனால் வயது என்பது ஒரு பொருட்டே கிடையாது என்பதை கேசவா உலகுக்கு உணர்த்து இருக்கும் அளவுக்கு ஆச்சரியமூட்டும் செயலை செய்திருக்கிறார்.

  Read More : ஸ்மார்ட்போன் வாங்க ரத்தத்தை விற்க முயன்ற சிறுமி.. ஷாக்கான மருத்துவ அதிகாரிகள்!

  தன்னுடைய சொந்த ஊரில் இருக்கும் பொதுமக்கள் சந்திக்கும் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு பொறுப்புள்ள ஒரு சிட்டிசன் ஆக, தன்னுடைய கடமையை உணர்ந்து, ஒரு பத்திரிக்கையாளராக மாறியிருக்கிறார், ஐந்தாம் ஆண்டு படிக்கும் கேசவா!

  கடந்த புதன்கிழமை காலையில், இந்த பிரச்சனைகளை உரிய அதிகாரிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு இவர் போராட்டத்தில் தன்னந்தனியாக ஈடுபட்டிருக்கிறார்.

  சாதாரணமாக அனைவரும் நடந்து போகும் சாலையில் தான் கேசவாவின் தங்கையும் வழக்கம் போல ஜாகிங் சென்று இருக்கிறார். சரி ஏதோ ஒரு பூச்சி கடித்தது என்று சாதாரணமாக நினைக்க முடியாத அளவுக்கு இவருடைய உடல்நிலை கவலைக்கிடமாக இருந்தது. மருத்துவமனையில் மோசமான நிலையில் தனது தங்கையைப் பார்த்த கேசவாவிற்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. உடனடியாக இது மற்ற யாரையும் பாதிக்கக் கூடாது என்ற சிந்தனை தோன்றி போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்.

  சாலையின் இரு ஓரங்களிலும் வளர்ந்திருக்கும் அனைத்து செடிகளையும் களை எடுக்க வேண்டும், மக்களை விஷத்தன்மை கொண்ட பூச்சிகளில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்று முனைப்புடன் தனியே சாலைகள் தூய்மையாக பராமரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை மேற்கொண்டிருக்கிறார்.

  இளம் வயதிலேயே சமூக உணர்வு ஏற்பட வேண்டும், பொதுமக்களுக்கு அனைவருக்குமே பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்ற சிந்தனை எல்லாம் இந்த சிறுவனுக்கு தோன்றியது மிகப்பெரிய விஷயம் தான். தன்னுடைய தங்கைக்கு ஏற்பட்ட பாதிப்பு வேறு யாருக்கும் நடந்து விடக்கூடாது என்று இந்த சிறுவன் தனியே நடத்திய போராட்டம் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது. இதற்கு, உரிய அதிகாரிகள் என்ன பதிலை கூறப் போகிறார்கள் அடுத்து என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார்கள் என்று அனைவருமே எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

  Published by:Lilly Mary Kamala
  First published:

  Tags: Trending, Viral