Home /News /trend /

மைக்ரோஃபோன், வெப்கேம்-ஐ பயன்படுத்த ஆப்களுக்கு அனுமதி வழங்கும் 4-ல் ஒரு பங்கு மக்கள்...!

மைக்ரோஃபோன், வெப்கேம்-ஐ பயன்படுத்த ஆப்களுக்கு அனுமதி வழங்கும் 4-ல் ஒரு பங்கு மக்கள்...!

மாதிரி படம்

மாதிரி படம்

கிட்டத்தட்ட பத்தில் ஆறு பேர், தங்களுக்கு தெரியாமலேயே யாராவது வெப்கேம் மூலம் அவர்களைப் பார்த்துக் கொண்டிருக்கலாம் என்று கவலைப்படுகிறார்கள் என்பது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

  • News18
  • Last Updated :
சுமார் 15,000 பேரிடம் நடத்தப்பட்ட ஒரு உலகளாவிய ஆய்வின்படி, ஆன்லைன் யூசர்களில் கிட்டத்தட்ட கால் பகுதியினர் எப்போதும் தங்கள் மைக்ரோஃபோன் அல்லது வெப்கேமை அணுக ஆப்ஸ் அண்ட் சர்வீஸ்களுக்கு அனுமதி வழங்குகின்றனர் என்பது தெரிய வந்துள்ளது. இருப்பினும், வெப்கேம் பாதுகாப்பைப் பற்றிய ஒட்டுமொத்த விழிப்புணர்வும் நம்பிக்கைக்குரியது என்று கூறப்பட்டாலும், கிட்டத்தட்ட பத்தில் ஆறு பேர், தங்களுக்கு தெரியாமலேயே யாராவது வெப்கேம் மூலம் அவர்களைப் பார்த்துக் கொண்டிருக்கலாம் என்று கவலைப்படுகிறார்கள் என்பது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் தீங்கிழைக்கும் மென்பொருள் மூலம் பலர் இதுபோன்ற சைபர் தாக்குதலில் ஈடுபட முடியும் என்று 60 சதவீதம் பேர் கவலைப்படுகிறார்கள் என்றும் சைபர் பாதுகாப்பு நிறுவனமான காஸ்பர்ஸ்கி நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தொற்றுநோய்களுக்கு மத்தியில் தற்போது வீடியோ கான்பரன்சிங் தளங்களின் அதிக பயன்பாடு இருக்கும் இந்த நேரத்தில் முடிவுகள் வெளிவந்துள்ளது சற்று பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு ஏற்பட்ட பாதிப்புகள் காரணமாக வேலை, சமூகம் மற்றும் பொழுதுபோக்கு தேவைகளுக்கு இந்த தொழில்நுட்பங்கள் மற்றும் ஆப்கள் மக்களுக்கு பேருதவி புரிந்ததால், மக்கள் தங்கள் மைக்ரோஃபோன் மற்றும் கேமராவிற்கு ஆப் அணுகலை அனுமதிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர். இந்த கருவிகள் அனைவரின் திடீர் டிஜிட்டல் மாற்றங்களின் வளமான திருப்பமாகவும் மற்றும் தொலைதூர வேலையை எளிதாக்கும் நுட்பமாக செயல்பட்டுள்ளன. அந்த வகையில் 25 முதல் 34 வயதுடைய 27 சதவீத மக்கள் எப்போதும் வெப்கேம் மற்றும் மைக்ரோஃபோன்களை பயன்படுத்தும் போது ஆப்களுக்கான அணுகலை அனுமதிக்கின்றனர் என்று காஸ்பர்ஸ்கி ஆராய்ச்சியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இருப்பினும் வயதானவர்களிடையே இது குறைவாகவே காணப்படுகிறது. ஆய்வில் பதிலளித்த 55 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களில் 38 சதவீதம் பேர், ஒருபோதும் ஆப்ஸ் மற்றும் சர்வீசஸ்களுக்கான அணுகலை வழங்க அனுமதிப்பதில்லை என்று தெரிவித்துள்ளனர். இதுகுறித்து காஸ்பர்ஸ்கியில் நுகர்வோர் தயாரிப்பு சந்தைப்படுத்தல் தலைவர் மெரினா டிட்டோவா ஒரு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, “நிச்சயமாக, வெப்கேம் பயன்பாடு மற்றும் செயல்முறைகள் தொடர்பான பாதுகாப்பு நெறிமுறைகளை பலர் உடனடியாக அறிந்திருக்க மாட்டார்கள்.

Also read... எம்ஐ நோட்புக் ப்ரோ 14, எம்ஐ நோட்புக் ப்ரோ 15 லேப்டாப்புகள் அறிமுகம் - சிறப்பம்சங்கள், விலை விவரம்!

எவ்வாறாயினும், ஆன்லைன் பாதுகாப்பு மற்றும் சாத்தியமான அச்சுறுத்தல்களைச் சுற்றியுள்ள விழிப்புணர்வின் வலுவான நேர்மறையான போக்குகளைத்தான் இப்போது நாங்கள் கவனித்து வருகிறோம், ” என்று தெரிவித்துள்ளார். வீடியோ மற்றும் மைக்ரோஃபோன் அணுகலை அனுமதிப்பதற்கு முன்பு தடுப்பு நடவடிக்கைகளை எடுப்பது மற்றும் அனுமதிகளைச் சரிபார்ப்பது போன்ற அதிக செயல்திறன் மிக்க நுகர்வோர் நடத்தைக்கு சைபர் பாதுகாப்பு வழிவகுக்கிறது என்று மேலும் அவர் தெரிவித்துள்ளார்.

நவீன தகவல்தொடர்பு வழிமுறைகளிலிருந்து தொடர்ந்து பயனடையும் போது, போதுமான எச்சரிக்கையுடன் சமநிலைப்படுத்துவதற்கான சிறந்த வழி, மக்கள் பயன்படுத்தும் ஆப்கள் மற்றும் அதன் சேவைகளைப் பற்றியும், அவை என்ன அனுமதிகளை உங்களிடம் கோருகின்றன என்பதை பற்றியும் கவனத்தில் கொள்ள வேண்டும். எடுத்துக்காட்டாக, வீடியோ அழைப்பு ஆப்களில் கேமரா அனுமதிகள் மட்டும் இருந்தால் அவை அர்த்தமுள்ளதாக இருக்கும். எந்தவொரு நியாயமான காரணமும் இல்லாமல் ஒரு நபரின் மைக்கை அணுகக் கோரும் எந்தவொரு பொருத்தமான செயல்பாடும் இல்லாத ஒரு ஆப் இருந்தால், அவை கோரும் அனுமதிகளை ஆராய்ந்து அணுகலை வழங்குவது அவசியம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Android

அடுத்த செய்தி