சினிமா, சீரியல் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளுக்கு தமிழக அரசு அனுமதி

சமூக இடைவெளியுடனும், முகக்கவசம், கிருமி நாசினி உபயோகித்தும், மத்திய, மாநில அரசுகளின் கட்டுப்பாடுகளை பின்பற்றியும் பணி செய்வதை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்

சினிமா, சீரியல் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளுக்கு தமிழக அரசு அனுமதி
சமூக இடைவெளியுடனும், முகக்கவசம், கிருமி நாசினி உபயோகித்தும், மத்திய, மாநில அரசுகளின் கட்டுப்பாடுகளை பின்பற்றியும் பணி செய்வதை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
  • Share this:
சினிமா மற்றும் சின்னத்திரை போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது

இதுகுறித்து அரசு தரப்பில் விடுக்கப்பட்டிருக்கும் செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்களும், சின்னத்திரை தயாரிப்பாளர்களும் கொரோனா ஊரடங்கால் கடந்த 50 நாட்களாக எந்த பணியும் நடக்காததால் பலரின் வாழ்வாதாரம் கேள்விக்குறி ஆகி உள்ளதால், இத்தருணத்தில் தயாரிப்புக்கு பிந்தைய போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளை செய்வதறகாக மட்டும் அனுமதி அளிக்க வேண்டும் என்று அரசிடம் கோரிக்கை வைத்தனர்.

மேற்கண்ட தயாரிப்பாளர்களின் கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்த தமிழக முதலமைச்சர், கீழ்கண்ட தயாரிப்புக்கு பிந்தைய போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளை மட்டும் 11.05.2020 முதல் மேற்கொள்ள அனுமதி அளித்துள்ளார்கள்


படத்தொகுப்பு (எடிட்டிங்) - அதிகபட்சம் 5 பேர்

குரல் பதிவு (டப்பிங்) - அதிகபட்சம் 5 பேர்

கம்ப்யூட்டர் மற்றும் விஷுவல் கிராபிக்ஸ் - 10 முதல் 15 பேர்டி.ஐ எனப்படும் நிற கிரேடிங் - அதிகபட்சம் 5 பேர்

பின்னணி இசை - அதிகபட்சம் 5 பேர்

ஒலிக்கலவை - அதிகபட்சம் 5 பேர்

எனவே போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளை மேற்கொள்ளும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், இப்பணியில் ஈடுபடுகின்ற பணியாளர்களுக்கு உரிய அனுமதி சீட்டுகளை பெற்றுத் தந்து, அவர்கள் சமூக இடைவெளியுடனும், முகக்கவசம், கிருமி நாசினி உபயோகித்தும், மத்திய, மாநில அரசுகளின் கட்டுப்பாடுகளை பின்பற்றியும் பணி செய்வதை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” இவ்வாறு அரசு விடுத்திருக்கும் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
First published: May 8, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading