Home /News /tiruvarur /

ஒட்டகம் மேய்க்க மறுப்பு... திருவாரூரை சேர்ந்த இளைஞர் குவைத்தில் சுட்டுக்கொலை

ஒட்டகம் மேய்க்க மறுப்பு... திருவாரூரை சேர்ந்த இளைஞர் குவைத்தில் சுட்டுக்கொலை

திருவாரூர் இளைஞர் குவைத்தில் கொலை

திருவாரூர் இளைஞர் குவைத்தில் கொலை

Thiruvarur | குவைத் நாட்டுக்கு வேலைக்கு சென்ற தமிழகத்தை சேர்ந்தவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Thiruvarur, India
    திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் தாலுகா லட்சுமண்குடி கிராமத்தை சேர்ந்தவர் முத்து குமரன் (30). இவருக்கு வித்யா என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர். டி.பார்ம் படித்துள்ள இவர், கொரோனா காலத்தில் வேலையிழந்த காரணத்தால் காய்கறி விற்று வந்துள்ளார். ஆனால், அதிலும் போதிய வருவாய் இல்லாத காரணத்தால் வெளிநாடு சென்று சம்பாதிக்க திட்டமிட்ட அவர்,  வெளிநாட்டுக்கு ஆட்களை அனுப்பும் ஐதராபாத்தை சேர்ந்த நிறுவனம் மூலம் குவைத்துக்கு சென்றுள்ளார்.

    குவைத்தில் அவருக்கு கிளர்க் வேலை அல்லது வீட்டில் உள்ள சிறு சிறு பணிகளை செய்யும் உதவியாளர் பணி வழங்கப்படும் என சொல்லப்பட்டுள்ளது. இதையடுத்து, குவைத் செல்வதற்காக ஒருவரிடம் ரூ.1.5 லட்சம் கடன் வாங்கிய முத்து குமரன், கடந்த 3ஆம் தேதி குவைத் சென்றுள்ளார்.

    தொடர்ந்து 4,5,6 ஆகிய தேதிகளில் தனது மனைவியுடன் பேசிய அவரை கடந்த 7ஆம் தேதி முதல் தொடர்பு கொள்ள முடியாமல் போயுள்ளது. அவரது செல்போன் எண்ணையும் குடும்பத்தினரால் தொடர்பு கொள்ள முடியவில்லை.  இதனிடையே, மனைவியை தொடர்புகொண்ட அவர்,  தனக்கு பேசிய வேலையை கொடுக்காமல்,  உள்ள பணக்காரர் ஒருவரின் வீட்டிற்கு அனுப்பி வைத்து பாலைவனத்தில் ஒட்டகம் மேய்க்கும் வேலை கொடுக்கப்பட்டது என்று கூறியுள்ளார்.

    பாலைவனத்தில்  தன்னை ஒட்டகம் மேய்க்க வைத்து விட்டார்கள். தங்கும் இடத்தில் மின் வசதி கூட இல்லை என்று கூறி கதறி அழுதுள்ளார்.  தனது கணவர் கூறிய செய்தியை கேட்டு வித்யாவும், அவரது குடும்பத்தினரும் கடும் அதிர்ச்சிக்கு உள்ளானார்கள்.

    அடி-உதை, கொலை மிரட்டல்

    இந்த நிலையில் முத்துக்குமரன் குவைத்தில் உள்ள தனது முதலாளியிடம், ஒட்டகம் மேய்க்கும் வேலை செய்ய தனக்கு கஷ்டமாக உள்ளதாகவும், தான் தனது சொந்த ஊருக்கு செல்ல விரும்புவதாகவும் கூறியுள்ளார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த முதலாளி, முத்துக்குமரனை அடித்து, உதைத்து கொடுமைப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து முத்துக்குமரன் குவைத்தில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொள்ள முயற்சி செய்துள்ளார்.  இந்த தகவலை அறிந்த அந்த முதலாளி, ஜாக்கூர் பாலைவனத்தில் ஒட்டகம் மேய்த்துக்கொண்டு இருந்த முத்துக்குமரனை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாக கூறப்படுகிறது.

    Also see... தமிழகத்தின் 17வது பறவைகள் சரணாலயமானது திருப்பூர்

    இதை குவைத் விசாரணை குழுவினர் உறுதிசெய்துள்ளதாகவும் தெரியவருகிறது.இதுதொடர்பாக வித்யா திருவாரூர் கலெக்டர் காயத்ரி கிருஷ்ணனிடம் புகார்மனு கொடுத்துள்ளார். இதற்கிடையே முத்துக்குமரன் சாவுக்கு நீதிகேட்டு கூத்தாநல்லூரில் நேற்று பொதுமக்கள் ஊர்வலம் நடத்தினர்.
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Crime News, Kuwait, Murder case, Thiruvarur

    அடுத்த செய்தி