ஹோம் /நியூஸ் /திருவாரூர் /

செய்வினையால் அரங்கேறிய கொடூரம்.. ஊராட்சி மன்ற தலைவர் கொலையில் பகீர் தகவல் - திருவாரூரில் அதிர்ச்சி

செய்வினையால் அரங்கேறிய கொடூரம்.. ஊராட்சி மன்ற தலைவர் கொலையில் பகீர் தகவல் - திருவாரூரில் அதிர்ச்சி

திருவாரூர் கொலை

திருவாரூர் கொலை

  • Local18
  • 2 minute read
  • Last Updated :
  • Thiruvarur | Thiruvarur

திருவாரூர் அருகே தனது குடும்பத்திற்கு செய்வினை செய்ததாக நினைத்து ஊராட்சி மன்ற தலைவரை வெட்டி கொலை செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டத்திற்குட்பட்ட அரையூர் ஊராட்சி மன்றத் தலைவராக இருப்பவர் பன்னீர்செல்வம். இவரது வீட்டிற்கு அருகில் வசித்து வருபவர் விஜய்(26). இவருக்கும் பன்னீர் செல்வத்திற்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் விஜய் புது வீடு கட்டியும் நிம்மதி இல்லாமல் இருந்ததால் விஜயின் தாய் தந்தை வீட்டை விட்டு வெளியேறி சென்று விட்டதாக கூறப்படுகிறது. மேலும் விஜய்யின் 18வயது தங்கையை பன்னீர்செல்வத்தின் சகோதரர் அழைத்துச் சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது. அது மட்டுமின்றி இவர்கள் இருவருக்கும் இடையே இடப்பிரச்சனை தொடர்ந்து இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில் பன்னீர்செல்வம் தனது குடும்பத்திற்கு செய்வினை செய்திருப்பதாக கூறி நேற்று நள்ளிரவு கொட்டையூர் என்கிற இடத்தில் பன்னீர்செல்வம் மது அருந்து கொண்டிருந்தபோது, போதையில் சென்ற விஜய் அவரை தலையில் இரண்டு இடங்களில் வெட்டியுள்ளார்.  இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் பன்னீர்செல்வத்தை மீட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதையும் படிங்க | திருவாரூரில் தனியார் வேலை வாய்ப்பு முகாம்- தேதி, விவரங்கள் வெளியீடு

அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். தொடர்ந்து விஜய் அந்தப் பகுதியில் இருந்தால் தனக்கு ஆபத்து ஏற்பட்டுவிடும் என்ற அச்சத்தில் தனது இரு சக்கர வாகனத்தில் பல்வேறு இடங்களில் சுற்றியுள்ளார்.

பிறகு திருவாரூர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சரணடைந்துள்ளார். அவரை கைது செய்த போலீசார் நன்னிலம் காவல் ஆய்வாளர் சுகுணாவிடம் ஒப்படைத்தனர். அதனை தொடர்ந்து விஜயிடம் வலங்கைமான் காவல் துறையினர் தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விசாரணையில் தனது 18 வயது தங்கையை ஆசைவார்த்தை கூறி பன்னீர்செல்வத்தின் சகோதரர் அழைத்துச் சென்று விட்டதால் எங்கள் குடும்பத்தில் அதிக பிரச்சனை ஏற்பட்டது. இதற்கு காரணம் பன்னீர்செல்வம் தான் அது மட்டுமின்றி எங்களுடைய பூர்வீக நிலத்தில் தொடர்ந்து பிரச்சனை செய்து வந்தார். மேலும், மாந்திரீகம் உள்ளிட்ட செயலில் தொடர்ந்து அவர் எங்களுக்கு எதிராக செயல்பட்டு வந்ததால் எங்கள் குடும்பத்தில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டு வந்தது. இதனால் ஆத்திரத்தில்,  அவரை கொலை செய்ய முடிவெடுத்து கத்தியால் தலையில் வெட்டியதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

செய்தியாளர்: கு.ராஜசேகர், திருவாரூர்.

First published:

Tags: Crime News, Local News, Murder, Thiruvarur