ஹோம் /நியூஸ் /திருவாரூர் /

திருவாரூர் மக்களே... உங்கள் புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லையா? - அப்படினா இந்த தகவல் உங்களுக்குதான்

திருவாரூர் மக்களே... உங்கள் புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லையா? - அப்படினா இந்த தகவல் உங்களுக்குதான்

புகார் மனு

புகார் மனு

Thiruvarur District | திருவாரூர் மாவட்ட மக்கள் கொடுக்கும் புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் போலீஸ் சூப்பிரண்டை நேரில் சந்தித்து மனு அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Thiruvarur, India

திருவாரூர் மாவட்ட மக்கள் கொடுக்கும் புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் வாரந்தோறும் புதன்கிழமை போலீஸ் சூப்பிரண்டிடம் நேரில் சந்தித்து மனு அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், திருவாரூர் மாவட்டத்தில் பொதுமக்கள் அளிக்கும் புகார் குறித்து உரிய நடவடிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் அளிக்கும் புகார்கள் குறித்து போலீஸ் நிலையங்களில் 15 நாட்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால், அது குறித்து திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வாராந்தோறும் புதன்கிழமை அன்று போலீஸ் சூப்பிரண்டை நேரில் சந்தித்து மீண்டும் மனு அளிக்கலாம்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இது தவிர அனைத்து நாட்களிலும் தினமும் காலை முதல் மதியம் வரை வழக்கம்போல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெற்று கொள்ளப்படும்.

Must Read : மயிலாடுதுறை மாவட்டம் திருப்பார்த்தன் பள்ளி தாமரையாள் கேள்வன் கோவிலுக்கு இத்தனை சிறப்புகளா!?

திருவாரூர் மாவட்டத்தில் கஞ்சா, குட்கா, பான் மசாலா விற்பனை மற்றும் சட்டவிரோத செயல்கள் நடைபெறுவதாக பொதுமக்களுக்கு தெரியவந்தால் அதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் நேரடியாக தெரியப்படுத்தும் விதத்தில் 9363495720 என்ற எண்ணில் தகவல் தெரிவிக்கலாம் இவ்வாறு என்று கூறப்பட்டுள்ளது.

First published:

Tags: Local News, Police suspended, Thiruvarur