Home /News /tiruvarur /

குவைத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட இளைஞரின் உடலை மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்: வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை

குவைத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட இளைஞரின் உடலை மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்: வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை

திருவாரூர் மாவட்டம் லட்சுமாங்குடி பகுதியை சேர்ந்த முத்துக்குமரன், கடந்த 7ம் தேதி துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    குவைத் நாட்டில் சுட்டுக் கொல்லப்பட்ட திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த இளைஞரின் உடலை மீட்டு கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை தெரிவித்துள்ளது.

    கடந்த 3ம் தேதி குவைத் நாட்டிற்கு வேலைக்கு சென்ற  திருவாரூர் மாவட்டம் லட்சுமாங்குடி பகுதியை சேர்ந்த முத்துக்குமரன், கடந்த 7ம் தேதி துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக குடும்பத்தினருக்கு கடந்த 9ம் தேதி தகவல் தெரியவந்த நிலையில், அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் குற்றச்சாட்டினர். தனது கணவன் தன்னிடம் பேசும்போது, ஓட்டகம் மேய்ப்பதற்காக தன்னை பாலைவனத்தில் விட்டிருப்பதாகவும், அங்கு மின்சார வசதி கூட இல்லை என்று கூறியதாகவும் முத்துக்குமரனின் மனைவி வித்யா தெரிவித்துள்ளார்.

    இதனிடையே முத்துக்குமரனின் மரணத்திற்கு நீதிக்கேட்டு பேரணி சென்ற அவரது உறவினர்கள், உடலை மீட்டுத்தரக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இந்நிலையில், முத்துக்குமரனை சுட்டுக்கொன்றது தொடர்பான முதற்கட்ட தகவல் கிடைத்துள்ளதாகவும், குவைத் நாட்டின் விசாரணை அறிக்கை கிடைத்த உடன் அவரது உடலை மீட்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை தெரிவித்துள்ளது.
    Published by:Arunkumar A
    First published:

    Tags: Gun shoot, Tamilnadu, Thiruvarur

    அடுத்த செய்தி