ஹோம் /நியூஸ் /திருவாரூர் /

பாசன ஆற்றின் மீது பயிர்காப்பீடு செய்து மோசடியாக பணம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர்....

பாசன ஆற்றின் மீது பயிர்காப்பீடு செய்து மோசடியாக பணம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர்....

கலெக்ட்டரிடம் மனு

கலெக்ட்டரிடம் மனு

Thiruvarur | திருவாரூர் பாசன ஆற்றின் மீது போலியாக சர்வே எண் கொடுத்து பயிர்காப்பீடு செய்து கிராம நிர்வாக அலுவலர் பணம் பெற்றார். இது குறித்து ஆதாரத்துடன் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Thiruvarur, India

  திருவாரூர் மாவட்டம் வடகரை கிராமத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்தவர் வித்யா. இவர் 2019-2020 ஆம் ஆண்டுக்கான பயிர் காப்பீடு செய்ததில் அந்த கிராமத்தில் விவசாய நிலம் இல்லாத தனது உறவினர்கள் பெயரில் போலியாக சிட்டா அடங்கல் ஏற்பாடு செய்து பல லட்ச ரூபாய் பயிர் காப்பீடு தொகை பெற்றதாக ஆதாரத்துடன் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணனிடம் நூகர்வோர் பாதுகாப்பு இயக்கத்தினர் புகார் மனு அளித்துள்ளனர்.

  இந்த புகார் மனுவில் வடகரை கிராமத்தில் பயிர் காப்பீடு செய்தவர்களின் விவரங்களை தங்கள் இயக்கம் மூலம் ஆய்வு செய்ததில் அந்த கிராமத்தில் இருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் வசிக்கும் பெண்மணி ஒருவர் பெயரில் வடகரை கிராமத்தில் சிட்டா அடங்கல் பெற்று கடன் பெற்றுள்ளதும் அதேபோன்று கிராம நிர்வாக அலுவலர் வித்யாவின் உறவினர்களான சத்யா, செந்தில்குமார், தவமணி சீனிவாசன் ஆகியோர் பெயரில் வடகரை கிராமத்தில் நிலம் உள்ளது போல் சிட்டா அடங்கல் பெற்று பயிர் காப்பீட்டுக்கான பணம் பெற்றுள்ளது தெரிய வந்துள்ளது.

  குறிப்பாக இதில் பல சர்வே எண் கொண்ட ஆறு, குளம், பாதை போன்ற இடத்திற்கு சிட்டா அடங்கல் ஏற்பாடு செய்து அதற்கும் பயிர் காப்பீடு செய்யப்பட்டு பணம் பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. மேலும் இதுவரை  10 லட்சம் ரூபாய் வரை முறைகேடு நடந்துள்ளது.

  Also see...போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு 3 ஆண்டுகள் சிறை

  எனவே 2019ல் வடகரை கிராமத்தில் நடைபெற்றுள்ள பயிர் காப்பீடு தொடர்பாக அப்போதைய கிராம நிர்வாக அலுவலர் வித்யா வழங்கியஆவணங்களை வருவாய்த்துறை  பரிசீலனை செய்து முறைகேட்டில் ஈடுபட்டுள்ள கிராம நிர்வாக அலுவலர் வித்யா மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் இந்த விவகாரத்தில் வருவாய் துறை, கூட்டுறவுத்துறை, பயனர்கள் என மூன்று தரப்பினர் சம்பந்தப்பட்டுள்ளதால் இதனை திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலக பொருளாதார குற்றப்பிரிவு மூலம் விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும் அந்த அமைப்பின் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

  செய்தியாளர்: கு.ராஜசேகர்,திருவாரூர்  

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Cheating, Officers, Thiruvarur, Village