முகப்பு /செய்தி /திருவாரூர் / திருவாரூரில் வெண்டைக்காய், தக்காளி விலை கிடுகிடு உயர்வு..

திருவாரூரில் வெண்டைக்காய், தக்காளி விலை கிடுகிடு உயர்வு..

காய்கறிகள்

காய்கறிகள்

திருவாரூரில் தக்காளியின் விலை நான்கு மடங்கு உயர்ந்து ரூ 40 வரை விற்பனை செய்யப்படுகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Thiruvarur, India

 திருவாரூர் மாவட்டத்தில் காய்கறி விலையின் கடும் உயர்வால் பொதுமக்கள் அவதி.

திருவாரூர் மாவட்டத்தில் முருங்கைக்காய், வெண்டைக்காய், மாங்காய் கொத்தவரை உள்ளிட்ட காய்கறி விலை கடுமையாக உயர்ந்துள்ளதாக வியாபாரிகளும் பொதுமக்களும் வேதனை தெரிவிக்கின்றனர். குறிப்பாக முருங்கைக்காய் மற்றும் கொத்தவரங்காய் வரத்து குறைந்து பத்து மடங்கு விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. இதேபோன்று மாங்காய் வெண்டிக்காய் விலை உயர்வு கண்டுள்ளது.

தக்காளி என்பது அதிக அளவில் சமையலுக்கு பயன்படுத்தக்கூடிய ஒன்று, அன்றாட உணவுப் பொருள் தயாரிப்பில் தக்காளி முக்கிய பங்கு வகிக்கிறது. தக்காளி விலை ரூ.10என விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது தக்காளியின் விலை நான்கு மடங்கு உயர்ந்து ரூ 40 வரை விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் வெண்டைக்காய் ஒரு கிலோ 10 ரூபாய் விற்று வந்த நிலையில் இன்று ஒரு கிலோ 70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதன்காரணமாக நடுத்தர வர்க்கத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோன்று ஒரு கிலோ கொத்தவரை பத்து ரூபாய் விற்று வந்த நிலையில் தற்போது 70ரூபாய் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் வெண்டிக்காய் ஒரு கிலோ 15 ரூபாய் விற்று வந்த நிலையில் தற்பொழுது 70 ரூபாயாகவும் ஒரு கிலோ முருங்கைக்காய் 25 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்பொழுது ஒரு கிலோ 150 ரூபாய் விற்பனை செய்யப்படுகிறது.

குறிப்பாக மாங்காயின் விலை ஒரு கிலோ 160 லிருந்து 170 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக  மக்கள் மிகுந்த பாதிப்படைந்துள்ளனர். ஹோட்டல் உரிமையாளர்கள் இந்த விலை ஏற்றம் மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், உடனடியாக காய்கறிகளின் விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தியாளர்: ராஜசேகர் (திருவாரூர்)

First published:

Tags: Local News, Tamil News, Thiruvarur, Vegetable price