முகப்பு /செய்தி /திருவாரூர் / திடீர் நெஞ்சு வலி.. தென்னை மரத்திலேயே உயிரை விட்ட இளநீர் வியாபாரி.. திருவாரூரில் சோகம்..

திடீர் நெஞ்சு வலி.. தென்னை மரத்திலேயே உயிரை விட்ட இளநீர் வியாபாரி.. திருவாரூரில் சோகம்..

தென்னை மரத்தில் உயிரிழந்த இளநீர் வியாபாரி

தென்னை மரத்தில் உயிரிழந்த இளநீர் வியாபாரி

Thiruvarur News : திருவாரூரில் தென்னை மரத்திலேயே உயிரிழந்த இளநீர் வியாபாரியின் உடலை கயிறு கட்டி மீட்ட தீயணைப்பு துறையினர். 

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Thiruvarur, India

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் புங்கஞ்சேரி மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் சின்னையன்(49). இளநீர் வியாபாரம் செய்து வருகிறார். இவர் தினமும் வலங்கைமான் சுற்றியுள்ள வீடுகள் மற்றும் தென்னந்தோப்புகளில் இளநீர் வாங்கி வந்து விற்பனை செய்வது வழக்கம். இந்த இளநீரை அவரே தென்னை மரத்தில் ஏறி தினமும் பறித்து வந்து விற்பனை செய்வதும் வழக்கம்.

இந்நிலையில், எப்போதும்போல் சின்னையன் அவரது ஊரில் உள்ள ஒரு 60 அடி உயர தென்னை மரத்தில் ஏறி இளநீர் பறிப்பதற்காக சென்றுள்ளார். இளநீர் பறித்துக்கொண்டிருந்தபோது திடீரென அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக தென்னை மரத்திலேயே அவர் மயங்கி விழுந்துள்ளார். தென்னை மர மட்டையில் தொங்கிக்கொண்டிருந்த அவரை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக வலங்கைமான் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் மரத்தில் ஏறி சின்னையன் உடலில் கயிறை கட்டி மரத்திலிருந்து அவரின் சடலத்தை கீழே இறக்கினர். இதனைத்தொடர்ந்து உடனடியாக அவரை வலங்கைமான் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இளநீர் வியாபாரி ஒருவர் மரத்திலேயே உயிரிழந்து கயிறு கட்டி மீட்கப்பட்ட சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும், அதிர்ச்சியும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் அப்பகுதி இளைஞர்களால் எடுக்கப்பட்டு இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோ காட்சியில் அப்பகுதியை சேர்ந்தவர்கள் அவரிடம் “உனக்கு ஒன்றுமில்லை. நன்றாக இருக்கிறாய் அண்ணா” என்று சொல்லியும் அவர் உயிரிழந்தது  வீடியோவை காண்போர் கண்களை கலங்க செய்கிறது.

செய்தியாளர் : ராஜசேகர் - திருவாரூர்

First published:

Tags: Local News, Tiruvarur