திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பகுதியில் உள்ள அலையாத்திக்காடு ஆசியா கண்டத்திலேயே மிகப்பெரிய பரபரப்பளவுக் கொண்ட காடாகும். இந்த காடு புயல் மற்றும் சூறாவளி காற்றிலிருந்தும், சுனாமியிலிருந்தும் கடலோர கிராமங்களையும் கிராம மக்களையும் பாதுகாக்கும் அரணாக விளங்குகின்றன.
மேலும் கடலோரங்களில் ஏற்படும் மண் அரிப்பை பெருமளவில் தடுத்து நிறுத்துகிறது. மொத்தம் முத்துப்பேட்டை பகுதியில் 11,885,91 ஹெக்டேர் பரப்பளவில் காணப்படக்கூடிய இக்காடுகள் திருவாரூர், தஞ்சை, நாகை மாவட்டங்களில் பரவி உள்ளது. காவேரி ஆற்றுப்படுகையின் தென்கோடியில் முத்துப்பேட்டை சதுப்பு நில அலையாத்திகாடுகள் அமைந்துள்ளது.
தஞ்சை மாவட்டத்தில் அதிராம்பட்டினம் மேற்கு பகுதியில் துவங்கி நாகை மாவட்டத்தின் கோடியக்கரை பகுதி கிழக்கு வரை இந்த அலையாத்திகாடு நீண்டுள்ளது. இந்த முத்துப்பேட்டை அலையாத்திக்காடுகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்லும் ஆற்றின் வழியே படகில் நெடுந்தூரப் பயணம் செல்வது பயணிப்பவர்களின் மனதை சொக்க வைக்கும்.
இதையும் படிங்க: மண்ணில் புதைந்த நகரம் தனுஷ்கோடி.. புயலின் கோரத்தாண்டவம் நிகழ்ந்து இன்று 58-வது ஆண்டு
இருபுறமும் அடர்ந்து படர்ந்து கிடக்கும் அலையாத்திகாடுகளின் இயற்கை அழகு அவர்களை மெய்மறக்க வைக்கும். உள்ளே சென்றதும் லகூன் பகுதியில் உள்ள குட்டிக்குட்டி தீவுகளின் அழகு நம்மை பிரமிக்க வைக்கும். ஆங்காங்கே தென்படும் பறவைகளின் கூச்சல் சத்தம் நம்மை ரசிக்க வைக்கும். இப்படி ஆற்றின் வழிப்பயணமாக கடலுக்குச் செல்வதும் ஒரு ஆனந்தம்தான் என்று காட்டுக்குள் சென்றுவிட்டு வரும் சுற்றுலா பயணிகள் கூறத்தவறுவதில்லை.
அந்த அளவிற்கு ஒற்றுமொத்த இயற்கையின் அழகை காட்டும் ஒரு சொக்க பூமியை இங்கு காணமுடியும். அதனால் இந்த காட்டின் அழகை ரசிக்க ஆண்டு முழுவதும் தமிழகம் மற்றுமின்றி இந்தியாவில் பல்வேறு பகுதியிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தொடர்ந்து வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில் கடந்த கடந்த 9ந்தேதி முதல் 18ந்தேதி வரை மாண்டஸ் புயல் எதிரொலியாக அலையாத்திக்காட்டுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறை தடை செய்து இருந்தது. பின்னர் கடந்த 19ந் தேதி மீண்டும் அலையாத்திக்காட்டுக்கு சுற்றுலா வர அனுமதி வழங்கியது.
இதனால் முதல் நாள் முதல் சுற்றுல்லா பயணிகள் அதிகளவில் குவிந்தனர். இந்தநிலையில் தெற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சுற்றுப்பகுதியில் உள்ள மேகங்கள் தமிழக கடலோரத்தில் வட தமிழகம் முதல் தென் தமிழகம் வரை நீண்டு நிலை கொள்ளும் எனவே தமிழக கடலோர பகுதிகளில் மழை பெய்யும் வாய்ப்புள்ளது.
Also see... 60கிமீ வேகத்தில் சூறாவளிக்காற்று.. இன்று எங்கெல்லாம் மழை.. வானிலை அலெர்ட் இதோ!
இதன் காரணமாக தமிழக கடலோர பகுதிகள் மன்னார் வளைகுடா இலங்கை கடலோர பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்கல் கடல் பகுதியில் 45கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் இன்று காலை முதல் முத்துப்பேட்டை பகுதியில் அதிகளவில் காற்று வீசி வருவதால் முத்துப்பேட்டை அலையாத்திக் காட்டுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல இன்று ஒரு நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது என வனத்துறை தெரிவித்துள்ளது.
செய்தியாளர்: கு.ராஜசேகர், திருவாரூர்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Banned, Local News, Tiruvarur, Tourist spots