ஹோம் /நியூஸ் /திருவாரூர் /

திருவாரூர்: நீர்நிலை ஆக்கிரமிப்பில் வீடு... அகற்ற வந்த அதிகாரிகளை தாக்கிய இளைஞர்கள் மீது குண்டாஸ்!

திருவாரூர்: நீர்நிலை ஆக்கிரமிப்பில் வீடு... அகற்ற வந்த அதிகாரிகளை தாக்கிய இளைஞர்கள் மீது குண்டாஸ்!

கைதானவர்கள்

கைதானவர்கள்

பொதுமக்கள் பாதிப்படையும் வகையில் குற்ற சம்பவங்களில் யாரேனும் ஈடுபட்டால் அவர்கள் மீது குண்டச்சட்டம் பாயும் என திருவாரூர் மாவட்ட எஸ்பி சுரேஷ்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Thiruvarur, India

  Goondas Act: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கொற்கை ஊராட்சி பகுதியில் இருக்கும் நீர்நிலை புறம்போக்கு இடங்களில் உள்ள வீடுகளை அகற்றுவதற்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த நிலையில் உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் மாவட்ட நிர்வாகத்தின் தலைமையில் வட்டாட்சியர் கோட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் முன்னிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வீடுகளை அரசு அதிகாரிகள் ஜேசிபி இயந்திரங்கள் மூலமாக அகற்றினர்.

  மேலும் இதை கண்ட அப்பகுதியைச் சேர்ந்த ரஜினிகாந்த், மணிகண்டன், மாதவராமன் ஆகிய மூவர் கலவரத்தை தூண்டும் வகையில் அரசு அதிகாரிகள் மீதும் வீடுகளை இடிப்பதற்கு கொண்டு வந்த ஜேசிபி எந்திரங்கள் மீதும் கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டனர்.

  இந்த நிலையில் கலவரத்தில் ஈடுபட்ட மூன்று நபர்கள் மீதும் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் பரிந்துரையின் பேரில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவின் அடிப்படையில் மூன்று நபர்களையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

  இதையும் வாசிக்கசவுக்கு சங்கர் மீது மேலும் 4 வழக்கு : 25-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவு

  மேலும் காவல்துறையினர் மற்றும் அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தாலோ அல்லது பொதுமக்கள் பாதிப்படையும் வகையில் குற்ற சம்பவங்களில் யாரேனும் ஈடுபட்டால் அவர்கள் மீது குண்டச்சட்டம் பாயும் என திருவாரூர் மாவட்ட எஸ்பி சுரேஷ்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

  Published by:Salanraj R
  First published:

  Tags: Goondas act