ஹோம் /நியூஸ் /திருவாரூர் /

வீட்டிற்குள் படம் எடுத்த நல்லபாம்புக்கு பால் வைத்து கும்பிட்ட பெண்..!

வீட்டிற்குள் படம் எடுத்த நல்லபாம்புக்கு பால் வைத்து கும்பிட்ட பெண்..!

பாம்புக்கு பவுலில் பால் வைத்த பெண்

பாம்புக்கு பவுலில் பால் வைத்த பெண்

Thiruvarur News | திருவாரூரில் வீட்டிற்குள் படம் எடுத்து ஆடிய நல்ல பாம்புக்கு பாத்திரத்தில் பால் வைத்த பெண் கும்பிட்ட சம்பவம் நடந்துள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Thiruvarur, India

  திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள மூங்கில்குடி கிராமத்தில் சக்திவேல் லட்சுமி என்ற தம்பதியினர் வசித்து  வருகின்றனர். நேற்று சக்திவேல் வேலைக்கு சென்று உள்ளார். அப்போது லட்சுமி வீட்டில் தனியாக இருந்துள்ளார். இந்நிலையில் ஃப்ரிட்ஜில் உள்ள பாலை எடுக்கச் சென்ற பொழுது ஃப்ரிட்ஜின் அருகாமையில் நான்கடி நீளம் உள்ள நாகப்பாம்பு படம் எடுத்து ஆடியது.

  உடனே அவர் வளர்த்து வரும் ரோஸி என்ற நாய் குழைத்து எச்சரிக்கை விடுத்துள்ளது. இதை பார்த்த லட்சுமி அங்கு உள்ளவரிடம் கூறியுள்ளார். அங்கு உள்ளவர்கள் இன்று கார்த்திகை தினம் முருக கடவுளின் வாகனமான நாகப்பாம்பு வீட்டில் படம் எடுத்து ஆடுவது நல்லது என்றும் வீட்டில் படம் எடுத்து ஆடிய நாகப்பாம்பை வெறும் வயிற்றுடன் அனுப்பக்கூடாது என்றும் அதற்கு பால் வைக்கும்படியும் கூறியுள்ளனர்.

  ஆபத்தை உணராத பெண் லட்சுமி கிண்ணத்தில் பால் வைத்துள்ளார் . அதன் பின்னரும் நாகப்பாம்பு படம் எடுத்த படியே நின்றுள்ளது. உடனே அக்கம் பக்கத்தினர் இதுபோன்று செய்யக்கூடாது என்றும் உடனடியாக அந்த நாகப் பாம்பை விரட்டி கொள்ளை புறம் உள்ள காட்டில் விட்டனர்.

  Also see... உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி.. அடுத்த 3 நாட்களுக்கு கனமழை! ஏரியாவாரியாக விவரம்!

  பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்ற பழமொழி இருக்கும் பொழுது இதுபோன்று வீட்டிற்கு வந்த நாகப்பாம்பிற்கு பால் வைத்தது அந்தப் பகுதியில் உள்ள மக்களை ஆச்சரியமடைய செய்துள்ளது.

  செய்தியாளர்: கு.ராஜசேகர், திருவாரூர்

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Snake, Thiruvarur