முகப்பு /செய்தி /திருவாரூர் / திருவாரூரில் விசிக பிரமுகர் வெட்டி படுகொலை.. பாஜக பிரமுகர் உட்பட 5பேர் கைது

திருவாரூரில் விசிக பிரமுகர் வெட்டி படுகொலை.. பாஜக பிரமுகர் உட்பட 5பேர் கைது

கொலை செய்யப்பட்டவர்

கொலை செய்யப்பட்டவர்

Thiruvarur murder | ப்ரைடு ரைஸுக்கு சாஸ் தராததால் ஏற்பட்ட வாக்குவாதம் முன் விரோதத்தோடு கலந்து கொலையாக மாறியது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Thiruvarur | Thiruvarur

திருவாரூர் அருகே பாஜக கொடியேற்ற நிகழ்வில் பங்கேற்காத காரணத்தால் விசிக பிரமுகரை வெட்டி படுகொலை செய்த பாஜக பிரமுகர்களை போலீசார் கைது செய்தனர்.

திருவாரூர் அருகே உள்ள அம்மையப்பன் அக்கரை நடுத்தெருவை சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் கவியரசன். இவர் திருவாரூரில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் அம்மையப்பனில் பாஜக சார்பில் கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றுள்ளது. இதற்கு வந்து கலந்து கொள்ளுமாறு கவியரசனை பாஜகவினர் அழைத்துள்ளனர். நான் விடுதலை சிறுத்தை கட்சியில் இருப்பதால் இதற்கெல்லாம் வர முடியாது என்று அவர் மறுத்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கொடியேற்ற நிகழ்விற்கு அடுத்த நாள் அம்மையப்பன் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் கவியரசன் மற்றும் அவரது நண்பர்கள் இருவர் உணவருந்தியுள்ளனர். அப்போது பிரைட் ரைஸ்க்கு சாஸ் கேட்டு உள்ளனர். அதற்கு அந்த ஹோட்டலில் பணிபுரியும் பெரிய காளி என்கிற ராஜசேகர் தர முடியாது என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டு மூவரையும் தாக்கியுள்ளார். இதுகுறித்து கொரடாச்சேரி காவல் நிலையத்தில் கவியரசன் உள்ளிட்ட  மூவரும் புகார் மனு அளிக்கின்றனர்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், இரு தரப்பினருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தி சமாதான முயற்சியில் ஈடுபட்டனர். இதில் இருவர் உடன்பட்ட நிலையில், கவியரசன் மட்டும் உடன்படாததாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த எதிர்தரப்பினர், இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்த கவியரசனை 7 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்றது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

தொடர்ந்து கவியரசனை கொலை செய்த பாஜக பிரமுகர் காளிதாஸ் (27) உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இருவர் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட 1 மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்த போலீசாருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

செய்தியாளர்: கு.ராஜசேகர், திருவாரூர்.

First published:

Tags: Crime News, Local News, Murder, Thiruvarur