ஹோம் /நியூஸ் /திருவாரூர் /

திருவாரூரில் தொடங்கிய தென் இந்தியா கபடி தொடர்.. முதல் பரிசு ரூ.1 லட்சம்

திருவாரூரில் தொடங்கிய தென் இந்தியா கபடி தொடர்.. முதல் பரிசு ரூ.1 லட்சம்

கபடி தொடர்

கபடி தொடர்

Thiruvarur south indian Competitions kabaddi | தென்னிந்திய அளவிலான இந்த கபடி போட்டியில் தமிழகம் மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்து அணிகள் பங்கேற்றன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Thiruvarur, India

திருவாரூரில் தொடங்கிய  தென்னிந்திய அளவிலான கபடி போட்டியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான அணிகள் பங்கேற்றன.

திருவாரூர் மாவட்டம் அடியக்கமங்கலத்தில் தென்னிந்திய அளவிலான 35ஆம் ஆண்டு ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கபடி போட்டி தொடங்கி நடைபெற்ற வருகிறது.இந்த கபடி போட்டியை பிரான்மலை கபடி கழகம் மற்றும் கிராம மக்கள் சார்பில் நடத்தப்படுகின்றது.கடந்த 34 வருடங்களாக இந்த கபடி போட்டி நடத்தப்பட்டு தற்போது 35 வது வருடமாக பகலிரவு ஆட்டமாக  நடத்தப்படுகின்றது.

தென்னிந்திய அளவிலான இந்த கபாடி போட்டியில் தமிழகம் மட்டுமல்லாது அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் கபடி அணிகள் பங்கு பெற்றுள்ளன. தமிழகத்தைப் பொறுத்தவரை திருவாரூர்,கோவை மதுரை,சென்னை,திருவள்ளூர்,காஞ்சிபுரம்,விழுப்புரம்,திருச்சி,  கோயம்புத்தூர்  உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் பங்கேற்றுள்ளன.

இந்த கபாடி போட்டியில் வெற்றி பெறும் ஆண்கள் அணிக்கு முதல் பரிசாக ஒரு லட்ச ரூபாயும் பெண்கள் அணிக்கு முதல் பரிசாக 40 ஆயிரம் ரூபாய் வழங்கப்படவுள்ளது. மேலும் ஆண்கள்,பெண்கள் என இரண்டு பிரிவுகளிலும் கால் இறுதியில் வெற்றி வாய்ப்பை இழக்கும் அணியினருக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட இருக்கிறது. குறிப்பாக குளிர்சாதனப் பெட்டி ,தொலைக்காட்சி பெட்டி, வாஷிங் மெஷின் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்படவுள்ளது.

First published:

Tags: Local News, Thiruvarur