திருவாரூர் அருகே உள்ள வேலங்குடி தென்கரை கிராமத்தை சேர்ந்தவர்கள் சத்திய சுந்தரம் - உஷாராணி தம்பதியினர். சத்திய சுந்தரம் நாகூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார் .இந்த நிலையில் வழக்கம்போல் கணவன் மனைவி இருவரும் தங்களது வீட்டில் நேற்று இரவு உறங்கிக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் இன்று அதிகாலை நேரத்தில் மங்கி குல்லா அணிந்த இரண்டு மர்ம நபர்கள் சத்திய சுந்தரத்தின் வீட்டு ஜன்னலை உடைத்து வீட்டிற்குள் நுழைந்துள்ளனர்.
வீட்டில் உள்ள பீரோ உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தங்க நகை பணம் போன்றவை கிடைக்கிறதா என்று தேடி பார்த்துள்ளனர்.ஏதும் கிடைக்காத காரணத்தினால் தூங்கிக் கொண்டிருந்த உஷாராணியின் கழுத்தில் இருந்த எட்டு பவுன் தாலி செயினை கழற்றுவதற்காக அவர்கள் இருவரும் முயற்சித்துள்ளனர். அப்போது கணவன் மனைவி இருவரும் விழித்து திருடர்கள் இருவரையும் பிடிப்பதற்காக முயற்சி செய்துள்ளனர்.
திருடர்களில் ஒருவன் சத்திய சுந்தரத்தை கட்டையால் தலையில் தாக்கியுள்ளான். தாலிச் செயினை அறுத்துவிட்டு அவர்கள் தப்ப முயன்ற போது அவர்களை பிடிப்பதற்கு தம்பதியினர் இருவரும் முயற்சி செய்துள்ளனர். திருடன் ஒருவனின் கைலியை பிடித்து இழுத்துள்ளனர்.அவன் கைலியை அங்கேயே கழற்றி விட்டு விட்டு அங்கிருந்து இரண்டு நபர்களும் தப்பி ஓடி விட்டதாக கூறப்படுகிறது.
Also Read: 40 வயசாச்சு இன்னும் ஏன் கல்யாணம் பண்ணல.. கிண்டல் பேச்சுகளால் ஆசிரியை எடுத்த விபரீத முடிவு
இதனையடுத்து தலையில் காயம் பட்ட சத்திய சுந்தரத்தை அக்கம்பக்கத்தினர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அங்கு அவர் சிகிச்சை பெற்று திரும்பியுள்ளார். சத்திய சுந்தரம் திருவாரூர் தாலுகா காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் தாலுகா காவல்துறையினர் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டனர். கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு அங்குஆய்வு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து தாலுகா காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய திருடர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.வீடு புகுந்து தம்பதியினரை தாக்கி தாலி செயினை பறித்துச் சென்ற சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
செய்தியாளர் : ராஜசேகர் (திருவாரூர்)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Tamil News, Theft, Thiruvarur