முகப்பு /செய்தி /திருவாரூர் / “கொலை செய்து பழி தீர்ப்போம்” - ரவுடி சடலத்தின் முன்பு நின்று சபதமேற்ற கூட்டாளிகள்.. அச்சத்தில் மக்கள்..!

“கொலை செய்து பழி தீர்ப்போம்” - ரவுடி சடலத்தின் முன்பு நின்று சபதமேற்ற கூட்டாளிகள்.. அச்சத்தில் மக்கள்..!

கொலை செய்யப்பட்டவர் - சபதமிட்ட இளைஞர்கள்

கொலை செய்யப்பட்டவர் - சபதமிட்ட இளைஞர்கள்

Thiruvarur rowdy murder | சடலத்தை புதைக்கும் இடத்தில் கொலை செய்து பழிக்கு பழி தீர்ப்போம் என கூட்டாளிகள் சபதமிட்ட வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Thiruvarur, India

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் நடேசன் தமிழார்வன் கடந்தாண்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான பூவனூர் ராஜ்குமார், இரண்டு தினங்களுக்கு முன்பு திருவாரூர் அருகே வைத்து வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பான விசாரணையில் தமிழார்வன் மகன் ஸ்டாலின் பாரதி, பழிதீர்ப்பதற்காக கூலிப்படையை ஏவி கொன்றது தெரியவந்தது.

ஸ்டாலின் பாரதி உட்பட 6 பேர் ரவுடி பூவனூர் ராஜ்குமாரின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், பூவனூர் ராஜ்குமார் உடல் தகனத்தின் போது, அவரது கூட்டாளிகள் ராஜ்குமாரின் சடலத்தின் முன் நின்று ஸ்டாலின் பாரதியை கொலை செய்வோம் என சபதமிட்டனர்.

இந்தக் காட்சிகள் செல்போன் வழியாக பகிரப்பட்ட நிலையில், இதனை பார்த்த நீடாமங்கலம் பகுதி மக்கள், பழிவாங்கும் படலம் நீளுமோ என அச்சம் அடைந்துள்ளனர்.

செய்தியாளர்: கு.ராஜசேகர், திருவாரூர்.

First published:

Tags: Local News, Murder, Thiruvarur