முகப்பு /செய்தி /திருவாரூர் / திருவாரூர் பிரபல ரவுடி கொலை வழக்கு... குற்றவாளியை சுட்டுப்பிடித்த காவல்துறை..!

திருவாரூர் பிரபல ரவுடி கொலை வழக்கு... குற்றவாளியை சுட்டுப்பிடித்த காவல்துறை..!

உதவி ஆய்வாளரை அரிவாளால் வெட்டிய பிரவீனை சுட்டுபிடித்த போலீஸ்

உதவி ஆய்வாளரை அரிவாளால் வெட்டிய பிரவீனை சுட்டுபிடித்த போலீஸ்

Thiruvarur Encounter | மணல்மேடு காவல் ஆய்வாளர் ராஜேஷ் தலைமையில் காவல்துறையினர் குற்றவாளி பிரவீனை சுட்டுப் பிடித்தனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Thiruvarur, India

திருவாரூர் மாவட்டம் பூவனூர் கிராமத்தை சேர்ந்த பிரபல ரவுடி ராஜ்குமாரை, 8 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியோடியது. இந்த வழக்கில் ஒளிமதி கிராமத்தில் வசிக்கும் ஸ்டாலின் பாரதி, வீரபாண்டியன் உள்ளிட்ட 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இவ்வழக்கில் தேடப்பட்டு வந்த பிரவீன் என்பவர் மல்லிப்பட்டினம் என்ற இடத்தில் தலைமறைவாக இருப்பது காவல்துறைக்கு தெரியவந்தது.

இதனையடுத்து மணல்மேடு காவல் ஆய்வாளர் ராஜேஷ் தலைமையில் காவல்துறையினர் பிரவீனை பிடிக்கச் சென்றனர். அப்போது, உதவி ஆய்வாளர் இளங்கோவை அரிவாளால் வெட்டிவிட்டு பிரவீன் தப்பிக்க முயன்றதாகக் கூறப்படுகிறது.

இதனை கண்ட ஆய்வாளர் ராஜேஷ், தான் வைத்திருந்த துப்பாக்கியால் பிரவீனின் காலில் சுட்டு பிடித்தார். காயமடைந்த உதவி ஆய்வாளர் இளங்கோ மற்றும் பிரவீன் ஆகிய இருவரும் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

First published:

Tags: Crime News, Local News, Thiruvarur