ஹோம் /நியூஸ் /திருவாரூர் /

மழையில் செல்ஃபி எடுக்காதீங்க.. பைக்ல மெதுவா போங்க.. திருவாரூரில் ஒலிப்பெருக்கி மூலம் காவல்துறை எச்சரிக்கை

மழையில் செல்ஃபி எடுக்காதீங்க.. பைக்ல மெதுவா போங்க.. திருவாரூரில் ஒலிப்பெருக்கி மூலம் காவல்துறை எச்சரிக்கை

ஒலிப்பெருக்கி மூலம் காவல்துறை எச்சரிக்கை

ஒலிப்பெருக்கி மூலம் காவல்துறை எச்சரிக்கை

மாண்டஸ் புயல் தொடர்ந்து வட மேற்கு திசையில் நகர்ந்து இன்று இரவு அல்லது நாளை அதிகாலை புதுவைக்கும் ஸ்ரீஹரிகோட்டாவிற்கும் இடைப்பகுதியில் மாமல்லபுரத்தில் ஒட்டி கரையை கடக்க கூடும்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Thiruvarur, India

திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்த வண்ணம் உள்ளது. இதனால் காவல் துறை சார்பில் மழைக்கால எச்சரிக்கைகள் மக்களுக்கு கொடுக்கப்பட்டு வருகிறது.

மாண்டஸ் தீவிர புயல் இன்று காலை வலுவிழந்து தற்போது சென்னையில் தெற்கு கிழக்கு 260 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. 13 கி.மீ வேகத்தில்  நகர்ந்து வரும் மாண்டஸ் புயல் தொடர்ந்து வட மேற்கு திசையில் நகர்ந்து இன்று இரவு அல்லது நாளை அதிகாலை புதுவைக்கும் ஸ்ரீஹரிகோட்டாவிற்கும் இடைப்பகுதியில் மாமல்லபுரத்தில் ஒட்டி கரையை கடக்க கூடும்.

இதன் காரணமாக வட கடலோர பகுதியில் மணிக்கு 50 முதல் 70 கி.மீ வரை காற்றுவீசும். மாலை நேரத்தில் காற்றின் வேகம் அதிகரித்து 80 கி.மீ வேகத்தில் காற்று வீசலாம். தென் தமிழக பகுதியில் அதிகபட்சமாக 60 கி.மீ வரை காற்றின் வேகம் இருக்கும்.

Read More : Cyclone Mandous | மாண்டஸ் புயல்.. 4 மணி நேரம் பேருந்து சேவை நிறுத்தம்.. உங்க ரூட் இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க

இந்நிலையில் திருவாரூர் மாவட்டப்பகுதிகளில் நேற்றிலிருந்தே மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்ட ஆட்சியர் காயத்ரி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளார். கடந்த டிசம்பர் 7 ஆம் தேதியன்றே தேசிய பேரிடர் மீட்புக் குழு திருவாரூ வந்தடைந்தனர்.

மேலும் காவல் துறை சார்பிலும் பல்வேறு நடவெடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் மழையில் ரோந்து வந்த பெண் காவல் அதிகாரி ஒருவர் ஒலிப்பெருக்கி மூலம் மழையில் செல்ஃபி எடுக்காதீங்க.. பைக்ல மெதுவா போங்க என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். இதேபோல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.

First published:

Tags: Cyclone Mandous, Heavy rain, Thiruvarur