ஹோம் /நியூஸ் /திருவாரூர் /

பசுமை பள்ளி திட்டத்தை தொடங்கி வைத்து குதிரை வண்டியில் பயணம் செய்த அமைச்சர் அன்பில் மகேஷ்!

பசுமை பள்ளி திட்டத்தை தொடங்கி வைத்து குதிரை வண்டியில் பயணம் செய்த அமைச்சர் அன்பில் மகேஷ்!

குதிரை வண்டியில் வந்த அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்

குதிரை வண்டியில் வந்த அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்

Minsiter Anbil Mahesh Poyyamozhi Press Meet | சத்துணவுக்கு தேவையான காய்கறிகளை இயற்கை முறையில் பயிர் செய்து அனுப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யமொழி கூறினார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Thiruvarur, India

திருவாரூரில் பசுமை பள்ளி திட்டத்தை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்து குதிரை வண்டியில் பயணித்து மகிழ்ந்தார்.  

திருவாரூர் மாவட்டம் கொடராச்சேரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பசுமை பள்ளி  திட்டத்தை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அன்பில் மகேஷ் பொய்யாமொழி அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 11 மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகள் இயற்கை விவசாய முறையில் காய்கறித் தோட்டம் அமைத்தல் விவசாயத்தின் அடிப்படைகளை புரிந்து கொள்வது போன்றவற்றிற்கான போன்றவற்றிற்கான இந்த பசுமை பள்ளி திட்டம் தொடங்கப்படுகிறது என கூறினார்.

மேலும் சத்துணவுக்கு தேவையான காய்கறிகளை இயற்கை முறையில் பயிர் செய்து அனுப்படும்.மேலும் தொழிற் கல்வி உள்ள அனைத்து பள்ளிகளிலும்  அதற்கு தகுந்தாற் போல் ஆய்வு கூடங்கள் அமைக்கப்படும் என்று ஏற்கனவே கூட்டத் தொடரில் முதலமைச்சர் கூறி இருக்கிறார். அதன் அடிப்படையில் தமிழ் முழுவதும் அனைத்து பள்ளிகளும் இந்த திட்டம் கொண்டு வரப்படும் என்றும் பொது முதல் முறையாக கருணாநிதி பிறந்த மாவட்டமான திருவாரூரில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் தமிழகம் முழுவதும் 1,540 பள்ளிகளில் காலை உணவு திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு லட்சத்து 16 ஆயிரம் மாணவ மாணவிகள் பயன் பெற்று வருகின்றனர் என்றும் தமிழகம் முழுவதும் 3030 பள்ளிகள் பழுதடைந்து உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளதாக கூறினார்.

கடந்த வருடத்தில் மட்டும் ஒரு லட்சத்து 88 ஆயிரம் மாணவ - மாணவிகள் பள்ளியில் இருந்து நின்று உள்ளார்கள். அவர்களை திரும்ப பள்ளியில் சேர்ப்பதற்கான முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும்  கடந்த இரண்டு வருடத்தில் 15 லட்சம் மாணவர்கள் அரசு பள்ளியில் மீண்டும் சேர்ந்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.

அதை தொடர்ந்து திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணனுடன் குதிரை வண்டியில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் பயணித்த அன்பில் மகேஷ் பொய்யா மொழி அங்கு உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பசுமை பள்ளி தொடக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்: ராஜசேகர்

First published:

Tags: Local News, Thiruvarur