ஹோம் /நியூஸ் /திருவாரூர் /

வீட்டு பீரோவில் புஸ்.. புஸ்.. சத்தம்! படமெடுத்து ஆடிய நல்ல பாம்பு.. திருவாரூரில் அதிர்ச்சி!

வீட்டு பீரோவில் புஸ்.. புஸ்.. சத்தம்! படமெடுத்து ஆடிய நல்ல பாம்பு.. திருவாரூரில் அதிர்ச்சி!

படமெடுத்து ஆடிய பாம்பு

படமெடுத்து ஆடிய பாம்பு

பீரோ மேலே சீறி கொண்டிருந்த நல்ல பாம்பை கண்டு அதிர்ச்சியடைந்த பாபு தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளித்தார்.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Thiruvarur | Thiruvarur

திருவாரூர் அருகே வீட்டிற்குள் புகுந்த 6 அடி நீளமுள்ள நாகத்தை ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டனர். 

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே ஜியா தோப்பு தெருவை சேர்ந்த பாபு (40) அவரது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் ஓட்டு வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் அவர் வீட்டிற்கு அடிக்கடி பாம்பு வருவது வழக்கமாக இருந்துள்ளது.

தினமும் பாம்பு வருவதால் குழந்தைகளை வைத்து அச்சத்துடன் வாழ்ந்து வந்தார். இந்நிலையில் இன்று வீட்டின் உள்ள பீரோவின் மேல் சரசரவென சத்தம் கேட்டுள்ளது.

ALSO READ | மழையில் செல்ஃபி எடுக்காதீங்க.. பைக்ல மெதுவா போங்க.. திருவாரூரில் ஒலிப்பெருக்கி மூலம் காவல்துறை எச்சரிக்கை

அப்போது அங்கு சென்ற பார்த்துள்ளார் பாபு. அதில், 6 அடி நீளம் உள்ள நாகப்பாம்பு படமெடுத்து ஆடி சீறிக் கொண்டிருந்தை கண்டு அதிர்ச்சியடைந்தார்.  பிறகு மன்னார்குடி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்புத் துறையினர் சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு 6 அடி நீளம் உள்ள நல்ல பாம்பை லாபகமாக பிடித்து வனப்பகுதியில் விடுவித்தனர்.

செய்தியாளர்: கு.ராஜசேகர், திருவாரூர்.

First published:

Tags: Local News, Snake, Thiruvarur, Tiruvarur