ஹோம் /நியூஸ் /Tiruvarur /

200க்கும் மேற்பட்ட பைக் திருட்டு.. பல மாவட்டங்களில் கைவரிசை காட்டிய ‘பலே’ பல்சர் திருடன் கைது

200க்கும் மேற்பட்ட பைக் திருட்டு.. பல மாவட்டங்களில் கைவரிசை காட்டிய ‘பலே’ பல்சர் திருடன் கைது

பல்சர் திருடன் கைது

பல்சர் திருடன் கைது

Thiruvarur : திருவாரூர் அருகே கைது செய்யப்பட்டுள்ள பார்த்திபன் பல்சர் பைக்கை மட்டும் குறிவைத்து திருடும் பழக்கம் உள்ளவன் என்பது தெரியவந்துள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

திருவாரூர், நாகப்பட்டிணம், மயிலாடுதுறை உள்ளிட்ட பல மாவட்டங்களில் பல்சர் பைக்கை மட்டும் குறிவைத்து திருடி வந்த ‘பலே’ பல்சர் திருடன் தனது சொந்த ஊரில் பைக் திருடி காவல்துறையினரிடம் சிக்கியுள்ளான். 

திருவாரூர் அருகே புலிவலம் விஷ்ணு தோப்பில் வசித்து வருபவர் காளிதாஸ். இவர் வாட்டர் கேன் சப்ளை செய்யும் வேலை செய்து வருகிறார். இவர் தனது பல்சர் பைக்கை, திருட்டு பயம் காரணமாக தனது வீட்டின் அருகில் சிசிடிவி கேமரா இருக்கும் இடத்தில் கடந்த 3 வருடங்களாக நிறுத்தி வந்திருக்கிறார்.

இந்நிலையில், நேற்று இரவு இவரது பைக்கை  ஒருவர் முகமூடி அணிந்துகொண்டு திருடிச் சென்றது தெரியவந்தது. இந்த திருட்டு சம்பவம்  சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. இதேபோன்று அருகில் உள்ள ஒரு வீட்டின் வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல்சர் என்எஸ் ரக பைக்கின் சைடு லாக்கை நீண்ட நேரமாக உடைக்க முயற்சித்திருப்பதும் தெரிய வந்தது.

அந்த பைக் பஞ்சர் என்பதால், அதனை திருட முடியாமல் அந்த திருடன் திரும்பிச் செல்லும் காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியிருந்தன. இதனையடுத்து காளிதாஸ் இது குறித்து திருவாரூர் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட திருவாரூர் தாலுகா காவல் துறையினர், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் திருவாரூர் புலிவலம் திருவாசல் பகுதியை சேர்ந்த பாலு என்பவரின் மகன் 22 வயதான பார்த்திபன் என்பவரை சந்தேகத்தின் அடிப்படையில் காவல்துறையினர் கைது செய்தனர்.

பார்த்திபனிடம் நடத்திய விசாரணையில் காளிதாஸ்  பைக்கை திருடியதை  ஒப்புக் கொண்டதுடன், திருடிய பைக் பட்டுக்கோட்டையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளான். காவல்துறையினர் அந்த பைக்கை மீட்டு திருவாரூர் தாலுகா காவல் நிலையம் கொண்டு வந்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பார்த்திபன் பல்சர் பைக்கை மட்டும் திருடும் பழக்கம் உள்ளவன் என்று கூறப்படுகிறது. இவன் திருடும் பைக்கில் கஞ்சாவை கடத்தி வந்து ஒப்படைத்த பின்பு, அந்த பைக்கை விற்பதை வழக்கமாகக் கொண்டுள்ளான்.

Must Read : ஆடு திருடிய நபரை காலால் எட்டி உதைத்து தாக்குதல் நடத்திய காவல் உதவி ஆய்வாளர்.. வீடியோ வெளியான நிலையில் பணியிடை நீக்கம்

மேலும், இவன் திருவாரூர், நாகப்பட்டிணம், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் 200க்கும் மேற்பட்ட பல்சர் பைக்குகளை திருடி உள்ளான் என்றும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து கைது செய்யப்பட்ட பார்த்திபன் நன்னிலம் கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளான்.

Published by:Suresh V
First published:

Tags: Arrested, Bike Theft, Thiruvarur