முகப்பு /செய்தி /திருவாரூர் / இனி வயதானவர்களும், மாற்றுதிறனாளிகளும் ரேஷன் கடைக்கு வர வேண்டிய அவசியம் இல்லை: அமைச்சர் சக்கரபாணி

இனி வயதானவர்களும், மாற்றுதிறனாளிகளும் ரேஷன் கடைக்கு வர வேண்டிய அவசியம் இல்லை: அமைச்சர் சக்கரபாணி

உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி

உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி

Thiruvarur | ரேஷன் கடைக்கு வர முடியாத வயதானவர்கள் மாற்று திறனாளிகள் தங்களுக்கு பதில் வேறொருவரை நாமினியாக நியமித்துக் கொள்ளலாம் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தகவல் தெரிவித்துள்ளார்.

  • Last Updated :
  • Thiruvarur, India

திருவாரூர் மாவட்டம் குளிக்கரை கிராமத்தில் 15 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு நியாய விலைக் கடைகளை உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பின்னர் முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். இதில் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் உள்ளிட்ட அரசு துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, வருகின்ற காலங்களில் ரேஷன் கடையில் உள்ள பொருட்களை பாக்கெட்டுகளில் வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் கூறியிருக்கிறார். வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் யாரும் ரேஷன் கடைக்கு வர முடியவில்லை என்றால் அதற்கான படிவத்தை நியாய விலை கடை விற்பனையாளரிடம் பெற்று அவருக்கு பதில் வேறொருவருக்கு ரேஷன் பொருட்களை கொடுப்பதற்கு அந்த படிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பித்தால் அதனை வட்ட வழங்கல் அலுவலர் மற்றும் மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் பரிசிலீத்து அனுமதி வழங்குவார்கள்.

Also see... நெல்லை அருகே பைக்கில் வந்த இளைஞர் வெட்டி படுகொலை...

இது போன்று ரேஷன் கடைக்கு வர முடியாதவர்களுக்கு யாரேனும் ஒருவரை நாமினியாக நியமித்து பொருட்கள் பெறுவதற்கு முதலமைச்சர் அனுமதி தந்திருக்கிறார். இந்த தகவலை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன் என்றும் ஆட்சிக்கு வந்து 14 மாதங்களில் 12, 50,000 புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது எனவும் கூறினார்.

செய்தியாளர்: செந்தில்குமரன்,திருவாரூர் 

First published:

Tags: Food, Ration Shop, Tiruvarur