ஹோம் /நியூஸ் /திருவாரூர் /

தாலிச் செயினை பறிக்க முடியாததால் ஆசிரியையை பைக்குடன் எட்டி உதைத்த திருடர்கள் - திருவாரூரில் அதிர்ச்சி சம்பவம்

தாலிச் செயினை பறிக்க முடியாததால் ஆசிரியையை பைக்குடன் எட்டி உதைத்த திருடர்கள் - திருவாரூரில் அதிர்ச்சி சம்பவம்

காயம் அடைந்த  ஆசிரியை

காயம் அடைந்த ஆசிரியை

Thiruvarur : திருவாரூர் மாவட்டம்  நன்னிலம் பகுதியில் இருச்சக்கர வாகனத்தில் சென்ற ஆசிரியையின் தாலிச் செயினை பறிக்க முயன்று முடியாதாதால் திருடர்கள் பைக்கை எட்டி உதைத்ததால், கீழே விழுந்து காயமடைந்த மூவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Thiruvarur, India

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்திற்குட்பட்ட கண்டிரமாணிக்கம் பகுதியைச் சேர்ந்த கிஷோர் என்பவரின் மனைவி வள்ளி (வயது 39). இவர் நன்னிலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.  அவர், பணி முடிந்த பின் தனது இரு மகள்களையும் பள்ளியில் இருந்து இருசக்கர வாகனத்தில் அழைத்துக்கொண்டு வழக்கம் போல வீட்டிற்கு சென்றுள்ளார்.

இதனை நோட்டமிட்ட இரண்டு மர்ம நபர்கள் இரு சக்கர வாகனத்தில் ஆசிரியர் வள்ளியை பின்தொடர்ந்து வந்துள்ளனர். சரியான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திருந்தவர்கள் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில்  ஆசிரியை வள்ளி சென்று கொண்டிருந்த போது திடீரென அவரது இரு சக்கர வாகனத்தை முந்தி சென்று அவரது கழுத்தில் அணிந்திருந்த தாலிச் செயினை பறிக்க முயன்றனர்.

இதை கவனித்த ஆசிரியரின் மூத்த மகள் செயினை விடாமல் பத்திரமாக பிடித்துக் கொண்டார். இதனால் திருடர்களின் முயற்சி பலனளிக்காமல் போனது.  செயினை பறிக்க முடியாத ஆத்திரத்தில் ஆசிரியர் வள்ளி சென்ற இருசக்கர வாகனத்தை கொள்ளையர்கள் எட்டி உடைத்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதில் இருசக்கர வாகனத்துடன் கீழே விழுந்த ஆசிரியர் வள்ளி மற்றும் அவரது இரு மகள்களுக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர்களை மீட்ட அக்கம்பக்கத்தினர் ஆம்புலன்ஸ் மூலம் நன்னிலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். உடலின் பல்வேறு இடங்களில் அவர்களுக்கு காயங்கள் ஏற்பட்டன. அவர்களுக்கு அங்கே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Must Read : உயிருடன் உள்ள மூதாட்டிக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பே இறப்பு சான்றிதழ் கொடுத்த கிராம நிர்வாக அலுவலர்!

இச்சம்பவம் குறித்து  நன்னிலம் போலீசார்  வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டப் பகலில் அரசு பள்ளி ஆசிரியையிடம் செயின் பறிக்க முயற்சித்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தையும் கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

First published:

Tags: Chain Snatching, Crime News, Thiruvarur, Two Wheeler