ஹோம் /நியூஸ் /திருவாரூர் /

திருவாரூரில் வீட்டிற்குள் புகுந்த அரிய வகை ஆமை... பத்திரமாக மீட்டு வனத்துறையிடம் ஒப்படைப்பு

திருவாரூரில் வீட்டிற்குள் புகுந்த அரிய வகை ஆமை... பத்திரமாக மீட்டு வனத்துறையிடம் ஒப்படைப்பு

அரிய வகை நட்சத்திர ஆமை

அரிய வகை நட்சத்திர ஆமை

Thiruvarur Rare star Tortoise | கட்டுப்பெட்டி ஆமைகள் இந்தியா, இலங்கை, மற்றும் பாகிஸ்தான் பகுதிகளில் மட்டும் காணப்படும் அரிய வகை நட்சத்திர ஆமை ஆகும்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Thiruvarur, India

திருவாரூர்   அருகே வீட்டுக்குள் புகுந்த அரிய வகை நட்சத்திர ஆமையை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை தெற்குகாடு மங்கலூர் சின்ன ஏரி பின்புறம் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த ஆமை ஒன்று அப்பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து என்பவர் வீட்டிற்குள்  நுழைந்துள்ளது. இந்த ஆமை சுமார் 2 கிலோ எடை கொண்டதாகவும் அந்த ஆமையின் மேற்புறத்தில் பொன்னிற நட்சத்திரங்கள் காணப்பட்டதாகவும் இருந்துள்ளது

இதனைக் கேள்விப்பட்டு அங்கு ஏராளமான சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கூடி இந்த ஆமையை வேடிக்கை பார்த்தனர். பின்னர் இந்த அரியவகை நட்சத்திர அமையை மாரிமுத்து வனத்துறையினரிடம் ஒப்படைக்க முடிவு செய்து முத்துப்பேட்டை வணக்காப்பாளர் சிவநேசனுக்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து மாவட்ட வன அலுவலர் அறிவொளி, முத்துப்பேட்டை வனச்சரக அலுவலர் ஜனனி ஆகியோரின் உத்தரவின்பேரில் அங்குவந்த வணக்காப்பாளர் கணேசனிடம் இந்த ஆமை ஒப்படைக்கப்பட்டது.

இதனையடுத்து இந்த ஆமை உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயத்தில் விடப்பட்டு அங்குள்ள வனத்துறையினரால் பராமரிக்கப்பட்டு வருகிறது.  இந்த நட்சத்திர ஆமை என்பது வறண்ட பகுதிகளில் காணப்படும் நில ஆமை ஆகும்.இதைக் கட்டுப்பெட்டி ஆமை என்றும் அழைப்பர். இது இந்தியா, பாகிஸ்தான் மற்றும் இலங்கையின் புதர் காடுகள் மற்றும் வறண்டப் பகுதிகளில் காணப்படுகிறது.

இந்த வகை ஆமை கவர்ச்சியான செல்லப்பிராணி வர்த்தகத்தில் மிகவும் பிரபலமானது என்பதால் இது பல்வேறு தேவைகளுக்காக கடத்தப்பட்டு வருகிறது. பெரும்பாலும் சிறு நட்சத்திர ஆமைகள் தான் கண்ணில் தென்படும். இந்த ஆமை பெரியளவில் உள்ளதால் கள்ளசந்தையில் இந்த ஆமை விலைமதிக்கமுடியாத ஒன்று என அங்கு வந்த பார்த்த மீனவர்கள் கூறினார்கள்.

இந்த அரியவகை நட்சத்திர ஆமை விலைமதிக்கமுடியாத ஒரு பொருள் இதனை விற்பனை செய்தால் உனக்கு ஒரு கோடி வரை கிடக்கும் என்று இந்த ஆமையை மீட்ட மாரிமுத்துவிடம் பலர் ஆசை காட்டிய போதும்  அதற்கு மயங்காமல் சட்டப்படி அதனை வனத்துறையிடம் ஒப்படைப்பதில் உறுதியாக இருந்த மாரிமுத்துவை பலரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

செய்தியாளர்:  ராஜசேகர்

First published:

Tags: Local News, Tamil News, Thiruvarur