ஹோம் /நியூஸ் /திருவாரூர் /

உஷார்.... திருவாரூர் மாவட்டத்தில் நாளை இங்கெல்லாம் மின்சாரம் இருக்காது

உஷார்.... திருவாரூர் மாவட்டத்தில் நாளை இங்கெல்லாம் மின்சாரம் இருக்காது

மின் தடை

மின் தடை

Thiruvarur District | திருவாரூர் மாவட்டத்தில் நாளை (சனிக் கிழமை) மின் தடை செய்யப்படும் பகுதிகள் பற்றிய விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Thiruvarur, India

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை துணை மின் நிலையத்தில் நாளை (17-12-2022) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி மின் கம்பங்கள், மின் மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணி நடக்க இருக்கிறது. இதை சரிசெய்து பின்னர் சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

எனவே, பொதுமக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் உங்கள் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு போதிய ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

அதன்படி, கீழ்கண்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை செய்யப்படும் என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Must Read : கன்னியாகுமரியில் பார்த்து ரசிக்க வேண்டிய பிரமிப்பூட்டும் அழகான சுற்றுலா தலம் - மாத்தூர் தொட்டிப்பாலம்

மின்தடை பகுதிகள்:

முத்துப்பேட்டை நகரம், தம்பிக்கோட்டை கீழக்காடு, உப்பூர், ஆலங்காடு, கீழ நம்ம குறிச்சி, ஜாம்புவான்ஓடை, கோவிலூர், தில்லைவிளாகம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

First published:

Tags: Local News, Power cut, Power Shutdown, Thiruvarur