ஹோம் /நியூஸ் /திருவாரூர் /

திருவாரூர் மாவட்ட மக்களே... நாளை இங்கெல்லாம் மின்சாரம் இருக்காது

திருவாரூர் மாவட்ட மக்களே... நாளை இங்கெல்லாம் மின்சாரம் இருக்காது

மின் தடை

மின் தடை

Thiruvarur District | திருவாரூர் மாவட்டத்தில் நாளை (செவ்வாய் கிழமை) மின் தடை செய்யப்படும் பகுதிகள் பற்றிய விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Thiruvarur, India

திருவாரூர் மாவட்டம் வடுவூர் மற்றும் கோவில்வெண்ணி ஆகிய துணை மின்நிலையங்களில் நாளை (27-12-2022) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதையொட்டி மின் கம்பங்கள், மின் மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணி நடக்க இருக்கிறது. மேலும் இதை சரிசெய்து பின்னர் சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

இதனால், பொதுமக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் உங்கள் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு உரிய ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி, நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை செய்யப்படும் என மின்வாரிய உதவிசெயற்பொறியாளர் க.பாலநேத்திரம் தெரிவித்துள்ளார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மின் தடை பகுதிகள்

வடுவூர், சாத்தனூர், நெய்வாசல், புள்ளவராயன்குடிகாடு, நகர், காளாச்சேரி, கோவில்வெண்ணி, முன்னாவல்கோட்டை, மேலபூவனூர், நத்தம், ஆதனூர், சோனாப்பேட்டை, கொட்டையூர், அம்மாப்பேட்டை ஆகிய இடங்களில் மின்சாரம் இருக்காது.

Must Read : மயிலாடுதுறை மாவட்டம் திருப்பார்த்தன் பள்ளி தாமரையாள் கேள்வன் கோவிலுக்கு இத்தனை சிறப்புகளா!?

அதேபோல, கருப்பமுதலியார்கோட்டை, மணக்கால், அரித்துவாரமங்கலம், சித்தமல்லி, மாணிக்கமங்கலம், கிளியூர், சேர்மாநல்லூர், முனியூர், அவளிவநல்லூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் மின் வினியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Local News, Power cut, Power Shutdown, Thiruvarur