ஹோம் /நியூஸ் /திருவாரூர் /

திருவாரூரில் மூட்டை மூட்டையாக போதை பொருட்கள்..! சொகுசு காருடன் சிக்கிய ஆசாமி..!

திருவாரூரில் மூட்டை மூட்டையாக போதை பொருட்கள்..! சொகுசு காருடன் சிக்கிய ஆசாமி..!

பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா பொருட்களுடன் கைதான மகேந்திரன்

பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா பொருட்களுடன் கைதான மகேந்திரன்

சுமார் 3 லட்ச ரூபாய் மதிப்பிலான 200 கிலோ பான்மசாலா,குட்கா உள்ளிட்டவற்றையும் பறிமுதல் செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய சொகுசு காரையும் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Thiruvarur, India

திருவாரூர் மன்னார்குடியில் சொகுசு காரில் கடத்திவரப்பட்ட 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான 200 கிலோ குட்கா, பான்மசாலா உள்ளிட்ட போதை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்..

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் சட்ட விரோதமாக போதை பொருள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் உத்தரவின் பேரில் மன்னார்குடி துணை காவல் கண்காணிப்பாளர் அஸ்வத் ஆண்டோ ஆரோக்கியராஜ் தலைமையில் போலீசார் மன்னார்குடியில் பல்வேறு பகுதிகளிலும் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் அப்போது போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மன்னார்குடி நகர் பகுதியில் உள்ள மன்னை நகர் என்ற இடத்தில் உள்ள சலூன் கடை ஒன்றில் போலீசார் நேற்று இரவு சோதனை நடத்தினர்.  சலூன் கடையில் சட்டவிரோதமாக பதுக்கி வைத்துள்ள பான் மசாலா மற்றும் குட்கா உள்ளிட்டவை விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் குட்கா விற்பனை செய்த ஹாஜா மொய்தீன் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

Read More : ஆற்று நீரில் மூழ்கி கல்லூரி மாணவன் உயிரிழப்பு.. கரூர் அருகே சோகம்.!

 அவரிடம் நடத்திய விசாரணையில் மன்னார்குடி நகர பகுதிக்கு உட்பட்ட தாமரைக்குளம் பகுதியில் சொகுசு கார் ஒன்றில் பான் மசாலா, குட்கா உள்ளிட்டவை விற்பனைக்காக எடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து மகேந்திரன் என்பவரை கைது செய்து பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 3 லட்ச ரூபாய் மதிப்பிலான 200 கிலோ பான்மசாலா,குட்கா உள்ளிட்டவற்றையும் பறிமுதல் செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய சொகுசு காரையும் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

சலூன் கடையில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர் : ராஜசேகர், திருவாரூர்

First published:

Tags: Crime News, Ganja, Thiruvarur