திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரது மகன் ரலீஸ் வயது 8. இவர்களது வீடு திருத்துறைப்பூண்டி ரயில்வே ஸ்டேஷன் அருகில் உள்ளது. சிறுவன் ரலீஸ் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறான். இந்த நிலையில் மாலை பள்ளி விட்டு வந்த சிறுவன் ரலீஸ் ரயிலில் பயணம் செய்ய ஆசைப்பட்டு திருத்துறைப்பூண்டி ரயில்வே ஸ்டேஷனில் நின்றிருந்த ராமேஸ்வரம் ரயிலில் தனியாக ஏறி விட்டான்.
இந்த நிலையில் ரயில் பட்டுக்கோட்டை ரயில்வே ஸ்டேஷனை வந்து அடைந்த உடன் அதற்கு மேல் பயணம் செய்ய பயந்து பட்டுக்கோட்டை ஸ்டேஷனிலேயே இறங்கி விட்டான். இதனை அடுத்து தனியாக பிளாட்பாரத்தில் அங்குமிங்கும் சுற்றித்திரிந்து நின்ற சிறுவனை பார்த்த ரயில்வே சிறப்பு இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் அச்சிறுவனிடம் விசாரித்த போது ரயிலில் பயணம் செய்ய ஆசைப்பட்டு இரயிலில் ஏறி வந்ததாக தெரிவித்துள்ளான்.
Also see... ஸ்கூலுக்கு சனிக்கிழமை லீவ் இல்லை.. சென்னையில் நாளை பள்ளிகள்!
இதனையடுத்து அவனது தந்தையின் தொலைபேசி எண்ணை கேட்டறிந்து சிறுவனின் தந்தையிடம் தகவல் கூறி பட்டுக்கோட்டை ரயில்வே ஸ்டேஷனுக்கு வரவழைக்கப்பட்ட நிலையில் , சிறுவனுக்கும் சிறுவனின் தந்தைக்கும் அறிவுரை கூறி சிறுவனை பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Child, Local News, Pattukkottai Constituency, Thiruvarur, Train