Home /News /tiruvarur /

நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியின் திருவாரூர் செய்தியாளர் உயிரிழப்பு

நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியின் திருவாரூர் செய்தியாளர் உயிரிழப்பு

நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியின் திருவாரூர் செய்தியாளர் உயிரிழப்பு

நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியின் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் செந்தில் குமரன் உயிரிழந்தது அவரது குடும்பத்தினருக்கும், நிர்வாகத்துக்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Thiruvarur, India
    நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியின் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் உடல்நலக் குறைவால் காலமானார்.

    நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியின் திருவாரூர் மாவட்ட செய்தியாளராக செந்தில் குமரன் பணியாற்றிவந்தார். அவருக்கு வயது 34. நியூஸ்18 தமிழ்நாடு தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே திருவாரூர் மாவட்ட செய்தியாளராக அவர் பணியாற்றிவந்தார்.

    சில மாதங்களாக அவர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். அவர், சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்தார். இந்தநிலையில், சிகிச்சைப் பலனின்றி அவர் இன்று உயிரிழந்தார். அவரது சொந்த ஊரான திருவாரூர் மாவட்டம் திருக்கண்டீஸ்வரத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Thiruvarur

    அடுத்த செய்தி